பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 பொழுது புலர்ந்தது.

‘பெர்ல் ஹார்பர் “ என்னும் பிரதான துறைமுகத்தை யுத்தப் பிரகடனம் செய்யாமலே திடீரென்று தாக்கிற்று. உடனே அமெரிக்காவும் பிரிட்டனும் ஜப்பானுடன் போர் செய்வதாக அறிவித்தார்கள்.

பெர்ல் ஹார்பரைத் தாக்குவதும் பிடிப்பதும் சாதா ‘ரணமான காரியமன்று. அதை ஜப்பானியர் அரை கொடியில் செய்து முடித்துவிட்டார்கள். அதன் பின் பிரிட்டிஷாருக்குச் சொந்தமான் இரண்டு பெரிய பிர மாண்டமான யுத்தக் கப்பல்களையும் மலேயா கடலில் தாழ்த்திவிட்டார்கள். * *

இதைக் கண்டதும் பிரிட்டிஷாரும் அமெரிக்கரும் பிரமித்துப்போனர்கள். பெர்ல் ஹார்பர் தாக்கப்பட்ட தற்கு மூன்று நாட்களுக்குமுன்னர்தான், (1941 டிஸம்பர் 3-ம் தேதி யன்று) தாரக் கீழ்காட்டிலிருந்த நேசதேசத் துருப்புக்களின் சேனதிபதியாயிருந்த ஸர் ராபர்ட்புரூக்போபாம் என்பவர் -

“ ஜப்பான் பிரதம மந்திரி டோஜோ என்னசெய்வ தென்று அறியாமல் தலையைச் சொரிந்துக்கொண்டிருக் கிறார். பிரிட்டிஷாரையும் அமரிக்கரையும் தாக்கும்படி யான துணிவு ஜப்பானுக்குக் கிடையாது. அவர்கள் வரட் டும், எந்தக் காலத்திலும் மறக்க முடியாதபடி தக்கபாடம் கற்பிப்போம்” என்று கூறினர்.

அப்படி பிரிட்டிஷ் அதிகாரிகள் ஜப்பான் குள்ளன் தானே இவன், என்ன செய்துவிடுவான் என்று இறுமாப் புடன் எவ்வித முன்னேற்பாடுமில்லா திருந்தார்கள். அதனல் ஜப்பான் திட தட வென்று ஜெயித்து வருவதைக் கண்டு ஆச்சரிய மடைந்தார்கள்.

கோடிக்கணக்கான பணத்தைக் கொட்டி உண்டாக் கிய சிங்கப்பூர் கடற்படை அரண் பிரிட்டிஷாருக்கு எவ் விதப் பாதுகாப்பும் அளிக்கவில்லை. அதுவும் வெகு சீக்