பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 பொழுது புலர்ந்தது

இந்திய வீரர்களுடைய உடலையும் உயிரையும் ஜப்பானிய ரிடம் ஒப்படைத்து விட்டார்கள்.

அதன் பின் தளபதி புஜிவாரா - “ நான் உங்களை ஜப்பானிய சர்க்கார் சார்பாக ஏற் றுக்கொண்டு தளபதி மோகன் சிங்கிடம் ஒப்புவிக்கின் றேன். இனிமேல் நீங்கள் அவருக்கே பணிந்து நடக்க வேண்டும் ‘ என்று கூறினர்.

அதன்பின் தளபதி மோகன் சிங் “ இந்தியாவுக்கு விடுதலே அளிக்கவும் கிழ்நாடுகளி லுள்ள இந்திய மக்களைப் பாதுகாக்கவும் இந்திய தேசிய ராணுவம் அமைக்கவேண்டும் என்று ஒரு யோசனை இருந்துகொண்டிருக்கிறது. நீங்கள் எல்லோரும் சந் தோஷமாக அதில் சேர்வீர்கள் என்று நம்புகிறேன். ‘ என்று கூறினர்.

இந்தவிதவாக இந்திய தேசிய ராணுவம் அமைக்க வேண்டும் என்ற யோசனை பெப்ரவரி 17-ந் தேதியே வெளியிடப்பட்ட போதிலும் அது உருவாவதற்கு ஆறு மாதங்கள் ஆயின. .

பிரிட்டிஷார் பயந்துபோய் தங்களைத் தனியே விட்டு விட்டு ஒடிவிட்டார்கள், ஜப்பானியர் எங்கு பார்த்தாலும் வெற்றி அடைந்து வருகிறார்கள், அவர்கள் இந்திய விடு தலைக்கு உதவி செய்வதாகக் கூறுகிறார்கள், அதனல் இந்திய தேசிய ராணுவம் அமைக்க வேண்டியதுதான் என்று இந்தியவிரர்கள் கினைத்தார்கள்.

ஆல்ை இந்திய ராணுவ அதிகாரிகள் அடிமைப்புத்தி யைத் துறக்க முடையாதவர்களாய் இருந்தபடியால் ஜப் பானியர்களே நம்பாமலிருந்தார்கள். தளபதி மோகன் சிங்கை ஏமாற்றிவிடுவார்கள் என்று எண்ணினர்கள். இந்திய வீரர்களே உபயோகித்து ஜப்பானிய ஏகாதிபத் தியத்தை ஏற்படுத்தி விடுவார்கள் என்று அஞ்சினர்கள்.