பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்திய தேசிய ராணுவம் 197

தேசங்களின் துரதர்கள் வந்து தங்கள் தேசங்களின் ஆசியைக் கூறினர்கள். ராஷ் பிகாரி போஸ் தலைமை வகித்தார்.

(1) இந்தியா பிரியாமல் ஏகமாக இருக்கவேண்டும் என்றும்,

(2) ஜாதிமத பேதமின்றி சகல காரியங்களும் தேசியமாகவே நடைபெறவேண்டும் என்றும்,

(3) இந்திய தேசியக் காங்கிரஸ் மகா சபையின் லட்சியங்களுக்கு ஒத்ததாகவே சங்கத்தின் வேலைகள் நடைபெற வேண்டும் என்றும்,

(4) இந்தியாவிலுள்ள பிரிட்டிஷ் சர்க்காரை அகற்றி பரிபூரணமான சுதந்திரம் ஸ்தாபிப்பதற்காக இந்திய தேசிய ராணுவம் அமைக்கவேண்டும் என்றும்,

(5) இந்தியாமீது படை யெடுக்குமுன் இந்தியாவி லுள்ள இராணுவத்திடமும் இந்திய மக்களிடமும் புரட்சி மனப்பான்மையை உண்டாக்க வேண்டும் என்றும், (6) இந்திய தேசீய காங்கிரஸின் மூவர்ணக் கொடி யையே உபயோகிக்க வேண்டும் என்றும்,

(7) ஜப்பானிடம் அதன் யுத்த நோக்கங்கள் எவை என்று கேட்கவேண்டும் என்றும்.

(8) ஜப்பான் இந்தியாவின் பரிபூரண சுதந்திரத்தை அங்கேரிக்கவேண்டும் என்று கேட்கவேண்டும் என்றும், (0) பாஷ் சந்திய போஸை மலேயாவுக்குக் கொண்டு வர முயற்சி செய்யவேண்டும் என்றும் தீர்மானங்கள் மிறைவேறின.

இந்தக் ர்ேமானங்களுக்கு இணங்க தளபதி மோகன் ங்ெகின் தலைமையில் இந்திய தேசிய ராணுவம் அமைக் கப்பட்டது. அதில் சேரும் ஒவ்வொருவரும்

“ நான் இந்தியாவின் விடுதலைக்காக என் உடல் பொருள் ஆவி மூன்றையும் அர்ப்பணம் செய்வேன்.