பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 பொழுது புலர்ந்தது

எனக்காக எவ்வித நன்மையும் தேடமாட்டேன். எல்லா இந்தியர்களேயும் ஜாதிமத பேதமின்றி என்னுடைய சகோதர சகோதரிகளாக பாவிப்பேன்” என்று இந்திய விஸ்வாசப் பிரமாணத்தில் கையெழுத் திட்டுக் கொடுத்தார்கள். அவ்விதமாக 30 ஆயிரம் பேர் சேர்ந்தார்கள். ஆனல் ஆயுதங்கள் முதலியன போதுமான அளவு இல்லாதிருந்ததால் 15 ஆயிரம் பேரைப் போர் வீரராகவும் 15 ஆயிரம் பேரைத் தொண்டர்களாகவும் சேர்த்துக் கொண்டார்கள்.

அத்துடன் ராணுவ உத்யோகஸ்தர்கள் ஆக வேண் டியவர்கட்குப் பயிற்சி அளிப்பதற்காக ஒரு பாடசாலை ஸ்ே-ன் என்னும் இடத்தில் ஏற்படுத்தப்பட்டது. அதில் ஒரு சமயத்தில் 300 பேர் பயிற்சி பெறுவதற்கு வசதிகள் செய்யப்பட்டிருந்தன. கவாத்து சமயம் ஆங்கிலப் பதங் கள் உபயோகியாமல் இந்துஸ்தானிப் பதங்கஆளயே உபயோகித்தார்கள். தேசிய உணர்ச்சியை உண்டாக்கு வதையே பிரதான அம்சமாகச் செய்திருந்தார்கள். அத் அதுடன் எவ்வித கஷ்டங்களையும் அனுபவிப்பதற்கும் கிழங்குகளே உண்டு ஜீவிப்பதற்கும் பயிற்சி அளிக்கப் பட்டது. கையில் காங்கிரஸ் கொடிச் சின்னமும் புஜத் தில் “ ஐ. என். ஏ “ என்ற சின்னமும் அணிந்து கொண் டார்கள். இந்திய தேசிய ராணுவம் என்பதை இன் டியன் கேஷனல் ஆர்மி என்று ஆங்கிலத்தில் சொல்வார் கள். அதன் முதல் எழுத்துக்களே “ ஐ. என். ஏ. “ என்பனவாகும். இராணுவத்துக்கு வேண்டிய சகல படைகளையும் வகுத்து துப்பாக்கி மெஷின் பீரங்கி போன்ற சகல ஆயுதங்களையும் உபயோகிப்பதற்கான பயிற்சி அளித்தார்கள். -

ஆனல் ஜப்பான் சர்க்கார் தாங்கள் இந்தியா சம்பந்த, மாகக் கொண்டிருந்த கொள்கையை விளக்கிக் கூற