பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 பொழுது புலர்ந்தது

ஜெர்மனியி லிருந்துகொண்டு ஜெர்மனியாரிடம் கைதி யான இந்தியத் துருப்புக்களைக் கொண்டு அங்கே ஒரு தேசியப்படை அமைக்க முயன்றதையும் கேள்விப்பட் டிருந்தார்கள். ஆதலால் அவர் வந்தால் இந்தியாவி அலுள்ளவர்களும் வெளிநாட்டிலுள்ளவர்களும் அவரிடம் கம்பிக்கை கொண்டு உழைப்பார்கள் என்று எண்ணி பெப்ரவரி மாதம் 20ம் தேதி இரண்டாவது இந்திய தேசீய ராணுவத்தை உருவாக்க ஆரம்பித்தார்கள்.

சுபாஷ் சந்திரபோஸ் 1943 ஜூலை மாதம் 2ம் தேதி யன்று ஷோனன் (சிங்கப்பூர்) வந்து சேர்ந்தார். அவ ருடைய மின்சார சக்தி கிறைந்த பேச்சைக் கேட்டதும் இந்திய மக்கள் எல்லோரும் இவரே நம் தலைவர், இந்தியா வுக்கு உயிர் விடுவதே நம் பாக்கியம் என்று அகமகிழ்ந் தார்கள்.

சுதந்திர இந்தியச் சேனை

ஜூலை மாதம் 4ம் தேதி சிங்கப்பூரில் ஒரு மகாநாடு கடந்தது. அப்பொழுது ராஷ் பிகாரி போஸ் இந்திய சுதந்திர லீகின் தலைமைப் பதவியை சுபாஷ் சந்திர போஸிடம் ஒப்புவித்தார். அன்றுமுதல் சுபாஷ் சந்திரர் “நேதாஜி” என்ற கம்பீரமான திருநாமம் பெற்றார்,

5ம் தேதியன்று இந்திய தேசிய ராணுவ வீரர்களு டைய அணிவகுப்பு நடைபெற்றது. அப்போது நேதாஜி

‘’ இந்திய சுதந்திர வீரர்களே !

இன்றுதான் என்னுடைய வாழ்நாளில் மகத் தான கெளரவம் பொருந்திய நாள். இந்திய சுதந் திரச் சேனே அமைக்கப்பட்டிருப்பதை வெளியிடும் பாக்கியம் பெற்றுளேன்.

இந்த இந்தியச் சேனை முற்றிலும் இந்தியர் களுடைய தலைமையிலேயே ஏற்பட்டிருப்பதையும்,