பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 பொழுது புலர்ந்தது

மாதர கீத"த்தையும் இயற்றியருளினர். அவற்றையே காங்கிரஸ் மகா சபையாரும் காந்தியடிகளும் அவர்கள் ஆணைவழி கிற்கும் தேசபக்தர்களும் உபயோகித்து தேசிய ஆர்வத்த்ை வளர்த்து வருகிறார்கள். வந்தே மாதரம் என்னும் மந்திரம் பாரத தேவியின் புத்திர புத்திரிகளின் தியாகத்தாலும் இரத்தத்தாலும் புனித மடைந்திருப்பது உலகமறிந்த விஷயம். ஆனல் அதை முஸ்லிம்கள் ஆட்சேபிப்பதை எண்ணியே நேதாஜி அதற் குப் பதிலாக “ ஜே ஹிந்த்’ என்னும் மந்திரத்தை உண் டாக்கினர். அத்துடன் போர்வீரர்கள் அணிவகுத்து இடது காலையும் வலது காலேயும் மாறிமாறி வைத்து * மார்ச் செய்யும்பொழுது வந்தே-மாதரம் என்று கூற வராது, ஜே-ஹிந்த் என்றே கூறவரும். மேலும் இந்திய சுதந்திரச் சேவீைரர்கள் பிரிட்டிஷாரை முறியடித்து சுதந்திரம் அமைக்க வருவதால் அவர்கள் பகைவர்களைப் பார்த்து என் அன்னைக்கு வெற்றி, உங்கட்குத் தோல்வி என்று முழங்குவதற்கு “ஜே ஹிந்த்” கோஷம்தான் பொருத்தமானதாகும். வந்தே-மாதரம், அன்னேயே வணங்குகிறேன் என்னும் மந்திரத்தை நம்முடைய சகோதர சகோதரிகளைக் காணும்போது கூறி வணங்கு வதற்கே ஏற்றதாகும். ஆதலால் நாம் நண்பர்களேச் சக்திக்கும்போது வந்தே மாதரம் என்று கூறுவதும் பிரியும்போது ஜே-ஹிந்த் என்று கூறுவதும் கல்லது.

இந்த ராணுவம் மற்ற எல்லாவிஷயங்களிலும் இந்திய தேசிய முதல் ராணுவத்தைப் போலவே இருந்த போதி லும், அதன் உணர்ச்சி முற்றிலும் புதியதாகவே இருந்தது. பழய ராணுவம் இந்திய விடுதலையை நோக்கமாகக் கொண்டிருந்தபோதிலும் ஜப்பானியர் தரும் கஷ்டங்களை நீக்கிக் கொள்வதற்காகவே சிருஷ்டியானதாகும். ஆனல் இப்பொழுது நேதாஜி வீரர்களுடைய மனத்தில் பாரத