பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்திய தேசிய ராணுவம் 203.

தேவியின் சுதந்திரத்தில் அடங்காத ஆவல் விளக்கைச் சுடர் விடும்படி ஏற்றி வைத்து விட்டார்.

1943 ஆகஸ்ட் 25-ம் தேதியன்று நேதாஜி ஆஜாத் ஹிந்த் பெளஜின் தலைமைப் பதவியை ஏற்றுக் கொண்டு “ நாம் ரோட்ரோலர் மாதிரி இந்தியா மீது படை எடுத்துச் சென்று நம்முடைய தாய் நாட்டை விடு விக்க வேண்டும். நம்முடைய பிறப்புரிமையை யாரும் பறித்துக் கொள்ள முடியாது. நாம் புது டில்லிக்குச் சென்று வைஸி ராயின் மாளிகையின் மீது நம்முடைய தேசியக் கொடியை நாட்டுவோம்.” என்று கூறினர். முந்திய தேசிய இராணுவத்தில் 15 ஆயிரம் போர்வீரர் களே இருந்தார்கள். ஆனல் இப்பொழுது நேதாஜியின் சேனேயில் சில நாட்களுக்குள்ளாகவே 40 ஆயிரம் பேர் சேர்ந்து விட்டார்கள்.

ஜான்ஸி ராணிப்படை

நேதாஜி இந்த இராணுவத்தை அமைத்ததோடு கிற்கவில்லை. எந்த தேசிய இயக்கத்திலும் பெண் களுடைய உதவி எவ்வளவு அவசியம் என்பதை அவர் நன்கு அறிவார். ஆதலால் இந்தியாவில் 1857-ம் வருஷத் தில் நடந்த முதல் சுதந்திரப்போரில் இங்கிலீஷ்கார தளபதிகளும் மூக்கில் விரல் வைத்து வியக்குமாறு வீரத் துடன் போர் செய்து உயிர் துறந்த ஜான்ஸி ராணியின் பெயரால் ஒரு பெண்கள் படையை அங்கே டாக்டரா யிருந்த லட்சுமிதேவியின் தலைமையில் கிறுவினர். அந்தப் படையில் அநேக பெண்கள் சேர்ந்து இராணுவப் பயிற்சி பெற்றார்கள். பர்மா முனையில் பல யிடங்களில் போர்க் களம் சென்று போர் புரியவும் செய்தார்கள்.

மழைகாலத்தில் அறுகம்புல் செழித்து வளரும். ஆளுல் வெயில் காலம் வந்ததும் அது பட்டுப்போகும்.