பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 பொழுது புலர்ந்தது

அதைப் பார்த்ததும் குழந்தைகள் “ இனி மறுபடியும் புல் வேண்டுமானல் இங்கே புல்லைக் கொண்டு வந்து நட வேண்டும் ‘ என்று எண்ணுவார்கள். ஆனல் அது தேவை யில்லை, மழை விழுந்தால் போதும், மறுபடியும் முளைத்து வளர ஆரம்பித்து விடும் என்பதைப் பெரியோர்கள் அறி வார்கள்.

சாதாரணமாக சம்முடைய நாட்டில் பெண்களே அபலைகள் என்றே கூறுவார்கள். நம்முடைய பழய நூல் களைப்பார்த்தால் அது தவறு என்பது தெரிய வரும்.

நரம் பெழுந்துலறிய நிரம்பர் மென்றாேள்

முளரி மருங்கின் முதியோள் சிறுவன் படை யெறிந்து மாறினன் என்று பலர் கூற

மண்டமர்க்கு உடைந்தனன் ஆயின், உண்ட என் முலை யறுத்திடுவென் யானெனச் சினை இக்

கொண்ட வாளொடு படுபிணம் பெயராச் செங்களம் துழவுவோள், சிதைந்து வேருகிய

படுமகன் கிடக்கை காணுஉ ஈன்ற ஞான்றினும் பெரி துவந்தனளே

என்பது போன்ற பல பாடல்கள் புறுங்ானூற்றில் காணப் படுவதே தக்க சான்றாகும். அத்துடன் பெண்களின் வீரத்தைக் கூறும் அந்தப் பாடல்களைப் பாடியவர்கள் அனைவரும் பெண்புலவர்களே என்பதும் கவனிக்க வேண் டிய விஷயமாகும்.

ஆல்ை பண்டை நாளில்தான் அப்படிப் பெண்கள் வீரர்களாய் இருந்தார்கள் என்பதில்லை. சமீபத்திலும் இருந்தார்கள் என்பதற்கு ஜான்ஸி ராணியே தக்க சான் ருவார். ஆனல் தனிமரம் தோப்பாகுமா? என்று கேட்கக் கூடும்.