பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்திய தேசிய ராணுவம் 207

இந்திய தேசிய ராணுவ வீரர்கள் பெப்ரவரி மாதம் 4-ம் தேதியன்று இந்திய மண்ணில் அரக்கான் மலைமீது காங்கிரஸ் கொடியைக் கொண்டுபோய் காட்டினர்கள். அன்று முதல் அந்த நாள் இந்திய தேசிய ராணுவ தின மாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.

அதன்பின் இந்திய தேசிய ராணுவ வீரர்கள் இந்திய பர்மிய எல்லேயைக் கடந்து மணிப்பூர் சமஸ்தானத்தில் புகுந்து பாலம் என்னும் இடத்தில் பிரிட்டிஷ் படை ஒன்றைச் சிறைப்படுத்தினர்கள்.

அதன்பின் தாமு, உக்ருல், விஷ்ணுப்பூர் முதலிய இடங்கள் அவர்கள் வ ச மா யி ன. இம்பால் யுத்தம் நடைபெற்றது. நாக மலைகளின் தலைநகரமாகிய கோவுதிமாவைக் கைப்பற்றினர்கள். 14-ம் தேதியன்று காக்தி கொரில்லா படையினர் பாலெல் ஆகாய விமானத் தளத்தைப் பிடித்தார்கள். இவ்விதமாக அவர்கள் 15 ஆயிரம் சதுரமைல் விஸ்தீரணமுள்ள இந்தியப் பிர தேசங்களைக் கைப்பற்றி கிர்வாகம் கடத்த ஆரம்பித் தார்கள்.

ஆனல் ஜப்பான் அவர்களுக்குப் போதுமான ஆயுதங் களும் ஆகாய விமானங்களும் அனுப்பித் தரவில்லை. அத் துடன் ஜப்பானிய ராணுவ அதிகாரிகள் தேவையான அளவு ஒத்துழைக்கவுமில்லை. இம்பால் பிரதேசத்தில் போர் நடந்தபோது ஏராளமாக மழை வந்தும் இடைஞ் சல் செய்தது. ஆதலால் வெற்றிக்கு மேல் வெற்றிபெற இருந்த வீரர்கள் பின்வாங்க வேண்டியவர்களானர்கள்.

1945 ஏப்ரல் மாதம் 4-ம் தேதி ஜப்பானியர்கள் ரங்கூனே விட்டுப்புறப்பட்டார்கள். இந்திய தேசிய ராணுவத்திலிருந்த உத்யோகஸ்தர்கள் நேதாஜியை . ரங்கூனே விட்டுப் புறப்பட்டுப் போகும்படியாக மன் ருடிக் கேட்டுக் கொண்டார்கள். அதனல் நேதாஜி தமது