பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 பொழுது புலர்ந்தது.

சேனேயை விட்டுப் பிரிய மனமில்லாமலே ஏப்ரல் 24-ம் தேதியன்று பாங்காக்குக்குச் சென்றார்.

அதன்பின் அவைசியமாக உயிர் கஷ்டமாவதைத் தடுக்கும் பொருட்டு அவர் ரங்கூனிலிருந்த சேனையைச் சரணுகதி அடையுமாறு உத்தரவிட்டார். அப்படியே அவர்கள் மே 4-ங் தேதி சரணுகதி அடைந்தார்கள். நேதாஜி ஆகாய விமானத்தில் டோகியாவுக்குப் பிரயாண மானர். போகும் வழியில் நேர்ந்த விபத்தில் அவர் இறந்து விட்டதாக அவருடன் சென்ற அவருடைய காரிய தரிசி கூறுகிறார் இறந்தாலும் இருந்தாலும் அவர் நமது நேதாஜியே என்பதில் சந்தேகமில்லை. i. நேதாஜியின் அற்புதங்கள்

அவர் இரண்டு பெரிய அற்புதங்களேச் செய்திருக் கிறார். இதுவரை இந்திய அரசாங்கத்தார் இந்திய மக்களே ராணுவ வீரராகத் தகுந்த ஜாதியாரென்றும் ராணுவ வீரராகத்தகாத ஜாதியாரென்றும் இரண்டு வகுப்பாராகப் பிரித்து வைத்திருந்தார்கள். ஆனல் நேதாஜி இராணுவ வீரராகத்தகாத ஜாதியாரும் இராணுவ வீரராகத் தகுந்த ஜாதியார் போலவே வீரம் பொருந்தியவர்கள் என்பதை நிதர்சனமாகக் காட்டி விட்டார். அது மட்டுமன்று, இராணுவத்தில் சேராமல் வியாபாரத்தில் ஈடுபட்டிருந் தவர்கள் கூட வீரர்கள் ஆக முடியும் என்பதையும் காட்டி விட்டார். ஆம், நேதாஜி புல்லர்களையுங்கூட மல்லர் களாகச் சிருஷ்டி செய்துவிட்டார்.

அவர்கள் போர்புரிய மட்டுமா செய்தார்கள் ? தங்களே இழிவாக கினேத்த ஐரோப்பியர்களே விரட்டி விரட்டி அடிக்கக் கூடச் செய்தார்கள்.

“ இந்தியர்கள் வீரர்களாக முடியும், ஆனல் ஒரு நாளும் தளபதிகள் ஆக முடியாது ‘ என்று ஆங்கிலேயர் கள் கூறுவது வழக்கம். ஆனல் நேதாஜியின் சேனையில்