பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 பொழுது புலர்ந்தது

புலாபாய் தேசாய் ராணுவக் கோர்ட்டின் முன் செய்த பிரசங்கம் உலகப் பிரசித்தி பெற்றுவிட்டது. அதில் அவர்

“ (1) பூரண சுதந்திரமும் தனி அரசுரிமையும் உள்ள காட்டுக்குத்தான் யுத்தம் தொடுக்க உரிமை உண்டு என்று ஒரு காலத்தில் சொல்லப்பட்டு வந்தது. ஆனல் அது அவசியமில்லை என்று இக்காலத்திய சர்வதேசச் சட்டம் கூறுகின்றது. அதற்கு போயர் யுத்தமே போதிய சான்றாகும்.

(2) காட்டைவிட்டு ஓடிவந்த சர்க்கார்களும் யுத்தம் தொடுக்கலாம் என்பதற்கு பிரஞ்சு, பெல்ஜிய சர்க்கார் கள் லண்டனிலிருந்து கொண்டு ஜெர்மனியுடன் போர் கடத்தியதைக் கொண்டு அறிந்துகொள்ளலாம்.

(3) இந்தியர்வைப் பொறுத்தவரை இராஜத்துரோ கக் குற்றமேது? இங்கே மன்னர் வேறு, தேசம் வேறு. மன்னரை எதிர்த்துப் போராடியது உண்மைதான். ஆனல் அப்படிப் போராடியது தேச சுதந்திரத்திற்காகவே அல்லவா? அந்தப் போராட்டத்தில் ராஜ விஸ்வாசப் பிரச்னைக்கு இடமேது? இடமுண்டென்றால் என்றேனும் அடிமை சுதந்திரம் பெறமுடியுமோ? அமெரிக்கா இங்கி லாந்துக்கு விரோதமாக யுத்தம் செய்து தானே சுதந்திரம் பெற்றது ?

(4) சிங்கப்பூர் வீழ்ச்சிக்குப் பிறகு எப்பொழுது இங் தியப் ப் ைட க ள் ஜப்பானியர் வசம் ஒப்புவிக்கப் பட்டனவோ அப்பொழுதே ராஜவிஸ்வாசக் கட்டுப்பாடு நீங்கி விட்ட தல்லவா?

(5) ஒரு தேசம் தனக்குக் கீழுள்ள காட்டைக் காக்க முடியாவிட்டால் அந்த தேசத்துக்கு அந்த நாட்டை ஆள உரிமை ஏது ?