பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜே. ஹிந்த் 213

கிலி சுக்குச்சுக்காக அறுந்துபோய் விட்டது என்று ஜனங் கள் எண்ணினர்கள்.

இந்திய தேசிய ராணுவத்தாரிடம் ஜனங்களே விட அதிகமாக அனுதாபம் காட்டியவர்கள் இந்திய சர்க்கா ரிடமிருக்கும் இராணுவத்தாரே ஆவர். அவர்களில் அநேகர் இ. தே. ராணுவ சகாய நிதிக்குப் பகிரங்கமாகப் பண உதவி செய்தார்கள். இன்னும் பலர் இ. தே. ரா. வீரர்களே உடனே விடுவிக்க வேண்டுமென்று சர்க்கா ருக்கு எழுதிக்கொண்டிருந்தனர். சிலர் தேசியக்கொடிக்கு பகிரங்கமாக வணக்கம் செலுத்த முன்வந்தனர். இந்தவித மாக சுமார் 100 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்திய ராணுவ மானது மறுபடியும் ராஜபக்தியைத் துறந்து தேசபக்தி யுள்ள ராணுவமாக ஆக ஆரம்பித்துவிட்டது.

அழியாத புகழ்பெற்று விட்ட இந்திய தேசிய ராணு வத்தைச் சிருஷ்டித்த நேத்தாஜி சுபாஷ் சந்திர போஸி னுடைய ஐம்பதாவது பிறந்த நாள் ஜனவரி மாதம் 23-ம் தேதி இந்தியா முழுவதிலும் கிராமம் கிராமமாக வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. கல்கத்தா நகரத் தில் அன்று நடைபெற்ற ஊர்வலத்தைப்போல் என்றும் நடைபெற்றதில்லை. அந்த ஊர்வலம் தெருக்கள் வழி யாக ஏழு மைல் தூரம் சென்றது. வீடுகளெல்லாம் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தன. ஜனங்கள் தெருக் களின் ஒரங்களில் வரிசை வரிசையாக நின்றார்கள். சீக் கியர்கள் குதிரையின்மேல் அணிவகுத்துச் சென்றார்கள். ஜே. ஹிந்த் நேத்தாஜிக்கு ஜே என்ற கோஷங்கள்

வானேப் பிளக்கும்படி முழங்கின.

இந்தவிதமாக ஜனங்களிடையே உண்டான உத் லாகம் ராணுவத்தாரிடமும் போலிஸாரிடமும் பரவ

ஆரம்பித்து விட்டது. இதுவரை அவர்கள் சர்க்கார் எது செய்தாலும் சரி என்று அடங்கி ஒடுங்கி இருப்