பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 பொழுது புலர்ந்தது

பதையே வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். ஆனல் இப்பொழுது அவர்களிடமும் தேசீய உணர்ச்சியும் சுயமரியாதை உணர்ச்சியும் கொழுந்துவிட ஆரம்பித்து விட்டன.

ராணுவ வேலை நிறுத்தங்கள்

பம்பாயில் இருந்த இந்திய விமானப் படையின் ஆங்கிலத் தளபதி, வீரர்கள் சாப்பாட்டு அறையில் சாதாரண உடை உடுத்தி இருப்பதைக் கண்டதும் “ இந்திய உத்யோகஸ்தர்களுக்கு கட்டுப்பாட்டை நிலை காட்டும்படியான திறமையில்லை’ என்று அகம்பாவமாகக் கூறினர். இதற்கு முந்திய காலங்களில் இப்படிக் கூறி யிருந்தால் இந்திய வீரர்கள் எதுவும் செய்யாமல் சும்மா யிருந்திருப்பார்கள். ஆல்ை இப்பொழுதோ அந்த ஆங்கிலத் தளபதி இவ்விதம் கூறியதும் அவர் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று வீரர்களும் உத்யோகஸ்தர் களுமாக 600 பேரும் உண்ணுவிரதத்தை மேற்கொண்டார் கள். அது மூன்று நாள் நடைபெற்றது. மேலதிகாரி வந்து இனி இவ்விதம் நடை பெருது என்று உறுதி கூறிய பின்னரே உண்ணுவிரதம் கின்றது.

பம்பாயில் இருந்த கடற்படை வீரர்கள் யுத்தகாலத் தில் பிரிட்டிஷ் சர்க்காருக்குப் பலவிதமான கஷ்டங்களுக் கிடையே சேவை செய்திருந்தும் அவர்கள் உணவு விஷ யத்திலும் ஊதியம் விஷயத்திலும் ஆங்கில மாலுமிகளே விடக் கேவலமாக நடத்தப்பட்டு வந்தார்கள். இந்த அணியாயத்தைச் சகிக்கமுடியாது என்று அவர்கள் 3 ஆயி ரம் பேர் வேலைநிறுத்தம் செய்தார்கள். அதை அடக்கு வதற்காக சர்க்கார் ராணுவத்தைக்கொண்டு சுடும்படி செய்தார்கள். அதன்மேல் வேலைநிறுத்தம் செய்தவர் களும் சுட்டார்கள்.