பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜே. ஹிந்த் 215

அதன்மேல் கடற்படை தளபதி காட்பிரே என்பவர் ‘ உங்களை அடக்கி விடுவதற்குப் போதுமான படை கள் சர்க்காரிடம் உள. கடற்படை முழுவதும் அழிந்து போனலும் பாதகமில்லை, உங்களை அடக்கியே தீர் வோம் ‘ என்று பயமுறுத்தினர்.

இங்கிலாந்திலுள்ள பிரதம மந்திரி ஆட்லி இந்தக் ‘ கலகத்தை “ அடக்குவதற்காக பிரிட்டிஷ் கடற்படையி லுள்ள சில கப்பல்களே இந்தியாவுக்கு அனுப்பி வைத் தார்.

வைஸி ராய் கிர்வாக சபையிலுள்ள இராணுவக் காரியதரிசி “ பிரிட்டிஷ் படையினர்க்குக் கொடுக்கும் சம்பளம்போல் இந்தியப் படையினர்க்குக் கொடுக்க சர்க்கார் வருமானம் இடங்கொடாது ‘ என்று கூறினர்.

ஆல்ை யுத்தம் கடந்து கொண்டிருந்த சமயத்தில் அமரிக்க வீரர்களும் பிரிட்டிஷ் வீரர்களும் சம்பளம் போதாதென்று வேலைநிறுத்தம் செய்தபொழுது சர்க்கார் இவ்விதம் கூறினர்களா ? அப்பொழுது தளபதிகள் பயமுறுத்தவுமில்லை. பிரதம மந்திரி கடற்படையை அனுப்பவுமில்லை. அவசரம் அவசரமாக வீரர்களுடைய குறைகளைத் தீர்த்து வைத்தார்கள். ஆனல் அவர்கள் வெள்ளைத்தோல் உடையவர்கள், இவர்கள் கறுப்புத் தோலுடையவர்கள்தானே !

இந்தக் கடற்படையினருடைய வேலைநிறுத்தம் தேச மெங்கும் பரவ ஆரம்பித்தது. கராச்சியிலும் கல்கத்தாவி லுள்ள கடற்படையினரும் பம்பாயிலும் மதராஸிலு முள்ள விமானப்படையினரும் அனுதாப வேலைநிறுத்தம் செய்தார்கள்.

கடற்படை அதிகாரி பயமுறுத்தியதையும் பிரதம மந்திரி கடற்படை அனுப்பியதையும் கண்டு வேலைநிறுத் தம் செய்த இந்திய வீரர்கள் கொஞ்சம் கூட பயந்துவிட