பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 பொழுது புலர்ந்தது

வில்லை. அவர்கள் தங்கள் நிலைமையைக் கூறி எப்படி கடந்துகொள்ள வேண்டும் என்று ஸர்தார் படேல் போன்ற காங்கிரஸ் தலைவர்களிடமே யோசனை கேட் டார்கள். அவர்கள் வேலைக்குப் போகும்படி சொன்ன தும் வேலைக்குச் சென்றார்கள். ஆம், இனிமேல் அவர் களுடைய தலைவர்கள் சர்க்கார் அல்ல, தேசியத் தலைவர் கள் தான்.

அதன்பின் பெப்ரவரி மாதம் 27-ந் தேதி ஜப்பல்பூரி லுள்ள போர்வீரர்களும் அதே காரணத்துக்காக வேலை கிறுத்தும் செய்தார்கள். அரசாங்கத்தார் அவர்களுடைய தலைவர்களேக் கைதி செய்தார்கள். ஆயினும் அவர்கள் காங்கிரஸ் அக்கிராசனர் ஆஸாத் யோசனையின்பேரி லேயே வேலைநிறுத்தத்தை நிறுத்தி வைத்தார்கள்.

இந்திய இராணுவத்தில் உலகப் பிரசித்திபெற்ற புகழ்படைத்த வீரர்கள் கூர்க்கர்களே யாவார்கள். அவர் களே பிரிட்டிஷ் சர்க்காரிடம் அதிகமான விஸ்வாஸ் முடையவர்கள். ஆனல் இப்பொழுது அவர்களுங்கூட ஆங்கில அதிகாரி ஆட்சேபகரமான பதங்களை உபயோகித் தார் என்று கூறி டேராது.ானில் வேலை கிறுத்தம் செய்து தங்கள் கண்டனத்தைத் தெரிவித்தார்கள்.

இராணுவத்தார் மட்டுமே இப்படிச் சுயமரியாதை உணர்ச்சியைக் காட்டினர்கள் என்பதில்லை. டில்லியி லுள்ள போலீஸ்காரர்களும் தங்களுக்குச் சம்பளம் போதாதென்று உண்ணுவிரதமிருந்தார்கள். ஜே ஹிந்த் என்றும் ஹிந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு ஜே என்றும் கோஷித்துக்கொண்டு ஊர்வலமாகச் சென்றார்கள். ஹிந்து ஸ்தானம் போலீஸ்காரர்களுக்கும் தாய்காடுதான், அதற்கு ஜெயம் உண்டாகவேண்டும் என்று அவர்களும் விரும்பவே செய்கிறார்கள்.