பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 பொழுது புலர்ந்தது

காருக்கு மூன்று விஷயங்களே உள்ளங்கை நெல்லிக்கனி போல விளக்கிவிட்டன.

1857-ம் வருஷத்தில் ஏற்பட்ட புரட்சியைக் கண்ட அதும் பிரிட்டிஷ் சர்க்கார் இனிமேல் இந்திய ராணுவ வீரர்களே இரும்புப் பெட்டிக்குள் வைத்தே வளர்த்து வரவேண்டும் என்று தீர்மானித்தார்கள். அப்படியே அவர்களுக்கும் ஜனங்களுக்கும் எவ்விதத் தொடர்புமில் லாதபடி செய்து வைத்தார்கள். அதல்ை நம்முடைய வீரர்கள் தேசபக்தி அணுவளவுகூடக் கலவாத ராஜ பக்தர்களாக ஆகிவந்தார்கள்.

அதல்ைதான் 1935-ம் வருஷத்தில் அரசியல் அமைப் புச் சட்டம் லண்டன் பார்லிமெண்டு சபையில் வாதிக்கப் பட்டபொழுது அப்பொழுது இந்தியா மந்திரியாயிருந்த ஸ்ர் ஸாமுவேல் ஹோர் “ கம்முடைய பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில் கடந்து வருவதற்குத் துணையாகவுள்ள மற்றவைகள் எல்லாம் அழிந்துபோனலும் நம்முடைய இந்திய ராணுவம் இருக்கிறது. நாம் அஞ்ச வேண்டிய தில்லே ‘ என்று தைரியமாகக் கூறினர்.

ஆல்ை அந்த ராணுவம் இப்பொழுது ராஜவிஸ்வா ஸத்தைவிட தேச விஸ்வாஸ்மே பிரதானமானது என் பதை கன்றாக அறிந்துகொண்டு விட்டது. உலகம் தோன்றிய நாள் முதல் சுதந்திர புருஷர்களாய் இருந்த இந்திய மக்கள் இருநூறு வருஷகாலம் அடிமைச் சங்கிலி யால் இறுக்கப்பட்டுவிட்டதன் காரணமாக சுதந்திர உணர்ச்சி அறவே இல்லாமல் போய்விடுவார்களா ? இந்திய ராணுவத்தாரிடமுள்ள சுதந்திர நெருப்பை அணேத்துவிட்டதாக பிரிட்டிஷார் எண்ணினர்கள். ஆல்ை அது அணேந்து போகவில்லை, நீறுபூத்த நெருப் பாகவே இருந்து கொண்டிருந்தது. இப்பொழுது அது