பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜே. ஹிந்த் 219,

யுத்தகாலத்தில் வீசிய சுதந்திரக் காற்று பட்டதும் நீறு ங்ேகி சுடர்விட ஆரம்பித்துவிட்டது.

பிரிட்டிஷ் தளபதிகளுக்கு அடங்காத இந்திய தேசிய ராணுவ வீரர்களைச் சுடும்படி சொல்லியபொழுதும் மாட்டோம் என்று மறுத்துவிட்டார்கள். இனிமேல் தங்களுக்குத் துணையாக இராது என்று பிரிட்டிஷார் கண்டுகொண்டு விட்டார்கள்.

(2) இந்தியர்களுக்கு நவீனப் போர்முறைகள் தெரியா என்றும், என்றென்றும் இட்டது கேட்கும் வெறும் சிப்பாய்களாகவே இருப்பார்கள் என்றும் பிரிட்டிஷ் சர்க்கார் எண்ணிக்கொண்டிருந்ததும் இப்பொழுது மாய மாக மறைந்துபோய் விட்டது. வெறும் சிப்பாயானலும் வெள்ளேயர்களேவிட அதிகமான வீரத்தைக் காட்டக் கூடியவர்கள் என்பதை எகிப்திலும் இத்தாலியிலும் தெள்ளத் தெளியக் காட்டிவிட்டார்கள். போர்வீரர்கள் பெறும் பரிசுகளில் அதிகமாகப் போற்றப்படுவது விக் டோரியா க்ராஸ் “ என்பதேயாகும். பர்மாப் போரில் இந்தப் பரிசை பெற்றவர்களில் பெரும்பாலோர் இந்திய வீரர்களேயாவர். ஆகாயப் படையிலுள்ள அமரிக்கர் கள் அாரத்தில்வரும் ஜப்பான் விமானங்களைத் தங்கட்கு. முன்னதாக இந்தியர்கள் கண்டுகொள்வதாகப் பாராட்டி ஞர்கள்.

சாதாரண வீரர்கள் பிறர் சுதந்திரத்திற்காகப் போர் புரியும்பொழுது இவ்வளவு வீரத்தையும் தீரத்தையும் காட்டியிருந்தால் தங்களுடைய சொந்த நாட்டின் சுதங் திரத்துக்காக போர்புரிய நேர்ந்தால் எவ்வளவு அதிக மான வீரத்தையும் தீரத்தையும் காட்டுவார்கள் ? அது நேதாஜி தலைமையில் இம்பால் போர் முனையில் இந்திய தேசிய ராணுவம் கடத்திய யுத்தத்தில் தெரிந்துவிட்டது.