பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜே. ஹிந்த் 221:

-

இவ்விதமாக எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சாக முழங்கிக் கொண்டிருந்தது. அதனுல்தான் ஆங்கில அறிஞர் ஹிட்லி என்பவர்

“ இன்னும் சில வருஷ காலங்களுக்குள் அணுகுண் டால் உண்டாகும் அதிர்ச்சியைவிடப் பெரிய அதிர்ச்சி கள் உலகத்தில் உண்டாகப் போகின்றன. அவைகளுள் பிரம்மாண்டமானது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தைக் குழிவெட்டிப் புதைக்கும் இந்தியப் புரட்சியாகவே இருக் கும். ஆதலால் இப்பொழுது அதிகாரம் ஏற்றிருக்கும் பிரிட்டிஷ் தொழிற் கட்சி சர்க்கார் இந்தியாவுக்கு உடனே பரிபூரண சுதந்திரத்தை வழங்கவேண்டும். இல்லை யானுல் இதுவரை காணப்படாத அளவு அதிகமான அடக்குமுறையும் இரத்தப் பெருக்கும் ஏற்படும். இந்தி யப் பிரச்சினேதான் தொழிற் கட்சி சர்க்காருடைய கியாய புத்திக்கு உரைகல்லாகும். அவர்கள் இந்தியாவுக்கு சுதந்திரம் அளிக்காவிட்டால் மனித ஜாதி விரோதிகள் என்னும் கூட்டத்தையே சேருவார்கள் ”

என்று நியூ லீடர் என்னும் பத்திரிகையில் எழுதி ர்ை. i m

இந்தமாதிரி இந்திய அரசியல் கிலேமை முற்றி வரு வதைக் கண்டதும் 1945 செப்டம்பர் மாதத்தில் பிரிட்டிஷ் பிரதம மந்திரி ஆட்லி,

‘’ இந்தியாவில் சட்டசபைத் தேர்தல்கள் நடந்து முடிந்தபின் பிரிட்டிஷ் சர்க்கார் அரசியல் நிர்ணய சபை அமைப்பது சம்பந்தமாக சட்டசபை அங்கத்தினர்களுட னும் சமஸ்தானப் பிரதிநிதிகளுடனும் கலந்து ஆலோசிப் பார்கள் ‘ என்று கூறினர்.

அப்படியே 1945 நவம்பர் மாதத்தில் மத்திய சட்ட சபைக்குத் தேர்தல் நடந்தது, அதில் காங்கிரஸ் மகா சபை பெருமிதமான வெற்றியடைந்தது.