பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காங்கிரஸ் மந்திரிகள் ராஜிநாமா 15

மும் கிடையாது. நீங்கள் தலையிட்டால் அது எளிதில் இரவும் செய்யாது. அதை நாங்கள் தீர்த்துக்கொள் வோம். அரசியல் நிர்ணய சபையை சகல கட்சியாரும் சம்மதிக்கும் முறையில் அமைத்து அதில் சிறுபான்மைக் கட்சியார்க் கெல்லாம் அவர்களுக்குத் திருப்தி உண்டாகு மளவு பரிபூரணமாக பாதுகாப்பு அளிக்கப்படும் என்று காங்கள் தெளிவுபடுத்தி விட்டோம். ‘

இவ்விதம் காங்கிரஸ் தலைவர் சிறுபான்மை வகுப் பார்க்கெல்லாம் பாதுகாப்பு அமைப்பதே காங்கிரஸின் நோக்கம் என்று தெளிவாகவும் அழுத்தமாகவும் கூறிய பின்னரும் இந்தியா மந்திரி ஜெட்லண்டு பிரபு பார்லி மெண்டு சபையில் மறுபடியும் - ஐயோ! இந்தியர்க்குள் எத்தனையோ வேற்றுமைகள் உளவே. அதுவல்லவோ அதிகாரத்தை அவர்களுக்கு அளிப்பதற்குத் தடையாக’ உள்ளது - என்று கூறினர்.

பிரிட்டிஷார் இந்தியாவுக்கு சுதந்திரம் அளிப்பதற்கு இதுவரை, போதுமான பாதுகாப்பில்லே, போதுமான ராணுவபலமில்லை, போதுமான அரசியல் ஞானமில்லே என்று எத்தனையோ பல காரணங்களைக் கூறிவந்தார்கள். ஆல்ை இப்பொழுது அவைகளை எல்லாம் விட்டுவிட்டு இறுதியாக வகுப்பு வேற்றுமை” என்றும் காரணத் தைக் காட்ட ஆரம்பித்திருக்கிறார்கள்.