பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 பொழுது புலர்ந்தது

காங்கிரஸ்காரர்களுக்கு முந்திய சபையில் 36 ஸ்தா னங்கள் கிடைத்திருந்தன. ஆனல் இப்பொழுது கிடைத்த ஸ்தானங்கள் 56 ஆகும்.

பார்லிமெண்டு கோஷ்டி

இப்படிக் காங்கிரஸ் மஹாசபைக்கு மத்திய சட்ட சபையில் ஏராளமான ஸ்தானங்கள் கிடைத்ததைக் கண்டதும் வேவல் பிரபுவும் பிரதம மந்திரி ஆட்லியும் கலக்கமடைந்தார்கள். வைஸ்ராய் வேவல் பிரபு, இங் குள்ள கிலேமையைப்பற்றி ஆட்லிக்குத் தினந்தோறும் டெலிபோன் மூலம் தெரிவித்துக் கொண்டிருந்தார். பார்லி மெண்ட் சபையில் பல மெம்பர்கள் இந்தியாவைப்பற்றி இடைவிடாமல் கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தார் கள். பிரதம மந்திரியால் அவர்களுக்குத் திருப்திகரமாகப் பதில் சொல்ல முடியவில்லை.

ஆதலால் பிரிட்டிஷ் சர்க்கார் இந்தியாவின் நிலைமை யையும் இந்திய மக்களின் அபிலாஷைகளையும் நேரில் அறிந்து வரும்பொருட்டு பார்லிமெண்டு அங்கத்தினர் கள் பத்துப்பேரை இந்தியாவுக்கு அனுப்பிவைத்தார்கள். அவர்கள் அதிகாரிகளைக் கண்டு பேசினர்கள். சகல கட் சித் தலைவர்களேயும் சந்தித்தார்கள் கிராமங்களுக்குச் சென்று ஏழைமக்களிடம் பேசினர்கள்.

ஒரு கிராமத்தில் ஒரு விவசாயியிடம் ‘ உமக்கு சுய ராஜ்யம் என்றால் என்ன என்று தெரியுமா ?’ என்று கேட்டார்கள்.

உடனே அவர் “ ஏன் தெரியாது. அது எங்களுக்கு வேண்டும். இப்பொழுதே கிடைக்கவேண்டும் ‘ என்று பதில் கூறினர்.

ஒரு சாதாரண விவசாயி இந்தமாதிரி கூறியதைக்