பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொழுது புலர்ந்தது

பிரிட்டிஷ் மந்திரி துாதுகோஷ்டி

அதன்மேல் பிரிட்டிஷ் மந்திரிசபையார் இனிமேல் பிரிட்டிஷ் ஆட்சியை இந்தியாவில் டிேக்கச் செய்வது பிரிட்டல்ை முடியாத காரியமென்றும், பிரிட்டனுக்கு நல்லதன்று என்றும் எண்ணினர்கள். அதல்ை ஒற் றுமை உண்டானல்தான் சுயராஜ்யம் என்று இதுவரை சொல்லிவந்த பல்லவி இனிமேல் பயன்படாது என்று உணர்ந்தார்கள். =

ஆதலால் பிரதமமந்திரி ஆட்லி “ பெரும்பாலான ஜனங்களின் எண்ணம் கிறைவேற வொட்டாமல் எந்த மைனரிட்டியும் தடுக்கும்படி விட முடியாது” என்று பார்லிமெண்டு சபையில் சொன்னர். ஆத லால் அவர்கள் தங்கள் மந்திரிகளில் மூவரை இந்தியா விற்கு அனுப்பி எவ்விதமாக இந்தியரிடம் அதிகாரத்தை மாற்றிக் கொடுத்துவிடலாம் என்பதற்குரிய வழியைக் கண்டுபிடிக்க விரும்பினர்கள்.

அப்படியே பெப்ரவரி மாதத்தில் பிரிட்டிஷ் மந்திரி தூது கோஷ்டியார் இந்தியாவுக்கு வந்து சேர்ந்தார்கள். அவர்கள் இந்தியா மந்திரியான பெத்விக் லாரன்ஸ் பிரபு வும், ஸர் ஸ்டாபோர்டு கிர்ப்ஸும், ஏ. வி. அலக்ஸான்ட ரும் ஆவார்கள்.

அவர்கள் இங்கிலாந்தை விட்டுப் புறப்படுவதற்கு முன் இந்தியாவிற்குப் பரிபூரண சுதந்திரம் வழங்குவதற் காகவே இந்தியாவிற்குப் போவதாக பத்திரிகை பிரதிநிதி களிடம் கூறினர்கள். ஆயினும் இந்திய மகாஜனங்கள்