பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரிட்டிஷ் மந்திரி துாதுகோஷ்டி 227

இங்கிலீஷ்காரர்களுடைய உறுதிமொழிகளைக் கேட்டுக் காது புளித்துப்போயிருந்தபடியால் இந்த தாது கோஷ்டி யாரும் நம்மை ஏமாற்றத்தான் வருகிறார்கள் என்று எண்ணினர்கள். அப்பொழுது காந்தியடிகள் அப்படி அவர்கள் விஷயத்தில் ஐயம்கொள்வது சரியன்று, அவர் கள் உண்மையாகவே சுதந்திரம் வழங்குவதற்குத்தான் வருகிறார்கள் என்று இந்திய மக்களுக்குத் தைரியம் கூறினர்.

இங்கிலாந்திலிருந்து வந்த மந்திரிகள் காட்டிலுள்ள சகல கட்சித் தலைவர்களையும் கண்டு பேசினர்கள். காங் கிரஸ்-க்கும் முஸ்லிம் லீகுக்கும் ஸ்ம ரஸம் ஏற்படுத்த பெருமுயற்சிகள் செய்தார்கள். ஆனல் அவர்களுடைய முயற்சிகள் பயன்பெறவில்லை. காங்கிரஸ்-க்கும் லீகுக் கும் ஒற்றுமை ஏற்படவில்லை. அதன்மேல் தூது கோஷ்டி யாரும் வைசிராயும் சேர்ந்து மே 16-ம் தேதி ஒரு அறிக்கை வெளியிட்டார்கள். இதுதான் தூதுகோஷ்டியின் திட்ட மென்று வழங்கப்படுகிறது.

து.ாது கோஷ்டியின் திட்டம்

அதன் சுருக்கம் வருமாறு :இந்தியா சிக்கிரமாகச் சுதந்தரம் அடைய வேண்டும் என்பது பிரிட்டிஷ் சர்க்கார் நோக்கம். ஆனால், இந்தியச் சுதந்தர அரசியலை இந்தியர்களே வகுத்துக்கொள்ள வேண்டும். பிரிட்டிஷ் சர்க்கார் அதற்கான ஏற்பாடுகளே மட்டுமே செய்வார்கள்.

சுதந்தரம் பெற்றபின் இங்கிலாந்துடன் சேர்ந்திருப் பதும் பிரிந்துபோவதும் இந்தியாவின் இஷ்டத்தையே பொறுத்தது. சேர்ந்திருப்பதால் நன்மைகள் உண்டு. ஆல்ை, சேர்ந்திருக்கும்படி எவ்வித கிர்ப்பந்தமும் கிடை யாது. எதுவாயினும், அதிகாரத்தை அமைதியான