பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரிட்டிஷ் மந்திரி துாதுகோஷ்டி 229

-

முஸ்லிம் முஸ்லி

மல்லாதார் சதமானம் சதமானம் வடமேற்கில் 62 38 வடகிழக்கில் 51-7 48-3 பாக்கி இந்தியாவில் 11 89

ஆகவே, சிறுபான்மையோர் பிரச்னையைப் பாக்கிஸ் தால்ை தீர்க்க முடியாது என்பது இந்தப் புள்ளி விவரங் களி லிருந்து தெளிவாகின்றது.

(2) அத்துடன், முஸ்லிமல்லாதாரே பெரும்பாலோ ராக உள்ள அஸ்ஸாமையும், பஞ்சாப் பகுதியையும், வங்காளப் பகுதியையும் பாக்கிஸ்தானில் சேர்ப்பது நியாயமாகாது.

(3) மேலும், பாக்கிஸ்தான் வேண்டுமென்று கேட் பதற்காகக் கூறும் வாதங்கள் எல்லாம் முஸ்லிமல்லாத பகுதிகளைச் சேர்க்கக்கூடாது என்து கூறுவதற்கும் பொருந்தும்.

(4) இந்த விஷயம், முக்கியமாகச் சிக்கியர்களைப் பாதிப்பதாகவும் இருக்கின்றது.

அதன்மேல், முஸ்லிம்கள் மெஜாரிட்டியாக உள்ள பாகங்களை மட்டும் சேர்த்து ஒரு சிறிய பாக்கிஸ்தான் அமைக்கலாமா என்று யோசித்தோம்.

ஆல்ை, முஸ்லிம் அல்லாத பெரும் பகுதிகளை நீக்கி விடுவதால், இந்தப் பாக்கிஸ்தான் சிறிதும் அனுபவ சாத்தியமில்லை என்று முஸ்லிம் லீக் கூறுகிறது.

அத்துடன் பஞ்சாபையும், வங்காளத்தையும் துண்டு போடுவது அங்குள்ள ஜனங்களில் பெரும்பாலோருடைய விருப்பத்துக்கும் கலன்களுக்கும் விரோதமானதாகும்.