பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 பொழுது புலர்ந்தது

ஆதாரமான அம்சங்கள் :

(1) இந்தியா முழுவதுக்கும் ஒரே ஒரு யூனியன், அயல்நாட்டு உறவு, தேசப் பாதுகாப்பு, போக்குவரத்து மூன்றையும் கிர்வகிக்கும். அதற்கான பணத்தை வகு லிக்க அதிகாரமுடையதா யிருக்கும்.

(2) அந்த யூனியனுக்கு கிர்வாக சபையும் சட்ட சபையும் உண்டு.

(3) மேற்கண்ட மூன்று விஷயங்கள் தவிர, மற் றவை யெல்லாம் மாகாணங்கட்கும் சமஸ்தானங்கட்குமே.

(4) மாகாணங்கள் மூன்று தொகுதிகளாகப் பிரிந்து கிர்வாகம் நடத்தலாம்.

(5) எந்த மாகாணச் சட்ட சபையாவது அரசியல் திட்டத்தில் மாற்றங்கள் செய்ய விரும்பில்ை, அதற்கான ஏற்பாடுகள் பத்து வருஷங்கட்கு ஒருமுறை செய்யப் படும்.

அரசியல் திட்டத்தின் ஆதாரமான அம்சங்களை வகுத்துவிட்டால்தான் இரண்டு கட்சியாரும் அரசியல் கிர்ணய சபை ஏற்படுத்துவதற்கு ஒன்று சேர்வார்கள் என்று தெளிவாகத் தோன்றுவதாலேயே இந்தச் சிபார் சைச் செய்கின்றாேம்.

அரசியல் நிர்ணய சபை: (1) வயது வந்தவர்க்கு ஒட் டுரிமை கொடுத்து மெம்பர்களைத் தேர்ந்தெடுப்பதே கியாயமானதாகும். ஆல்ை, காலதாமதம் ஆகுமானதால், இப்பொழுதுள்ள சட்ட சபைகளையே உபயோகித்துக் கொள்ள வேண்டும். i. (2) ஆல்ை, மெம்பர் தொகை ஜனத்தொகைக்கு ஏற்ப இல்லாததால் 10 லட்சம் ஜனத்தொகைக்கு ஒர் அங்கத்தினர் வீதம் தேர்தல் செய்யவேண்டும்.