பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொழுது புலர்ந்தது

காங்கிரஸ் லீக் பரிசீலனை

இந்தத் திட்டத்தில் இந்தியாவை இந்துஸ்தா னென்றும் பாக்கிஸ்தானென்றும் இரண்டு தனி ராஜ்ஜி .யங்களாகப் பிரிப்பது நல்ல தில்லை என்றும் அதன் மூலம் மைனரிட்டிப் பிரச்னையை தீர்க்க முடியாதென்றும் அத்துடன் அது நடக்கக்கூடிய காரியமில்லை என்றும் பிரிந்தால் கிடைக்கக்கூடிய நன்மைகளை பிரியாமலே பெற்றுவிட முடியுமென்றும் தாது கோஷ்டியார் கூறி இருக்கிறார்கள்.

இந்தத் திட்டத்தில் கூறப்படும் அடிப்படையான அம்சங்களாவன :

(1) இந்தியா பரிபூரண சுதந்திரம் பெறும். பிரிட்ட அனுடன் இருக்க வேண்டுமா வேண்டாமா என்பதை அரசியல் கிர்ணய சபை முடிவு செய்யும்.

(2) அரசியல் வகுக்கப்பட்டவுடன் பிரிட்டிஷ் சர்க் கார் விலகிக்கொண்டு இந்திய மத்திய சர்க்காருடன் ஒப் பந்தம் செய்துகொள்வார்கள்.

(3) அரசியல் வகுக்கப்படும்வரை பிரிட்டிஷ் சேனை இந்தியாவில் இருக்கும்.

(4) மைனரிட்டிகளின் நலன்களைப் பாதுகாக்கும் பொருட்டு ஒரு ஆலோசனைக் கமிட்டி ஏற்படும். அது அவர்களுக்கு வேண்டிய ஜீவாதாரமான உரிமைகளைக் குறித்து அரசியல் கிர்ணய சபைக்கு யோசனை கூறும்.