பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 பொழுது புலர்ந்தது

தகைய பிரிப்பை நீக்கிவிடமுடியும். மதப்பாகுபாடில் லாத அரசியல் கட்சிகள் உண்டாகவேண்டும் என்பதே லட்சியம்.

(15) அரசியல் கிர்ணய சபையில் அங்கத்தினராக இருக்கும் முஸ்லிம்களும் முஸ்லிமல்லாதவர்களும் தனித் தனியாகப் பெரும்பான்மை ஒட்டுமூலம் திட்டத்தில் கூறி யிருக்கும் யோசனைகளைப் பெருக்கவோ குறைக்கவோ செய்யலாம்.

காந்தி யடிகள் ஆராய்ச்சி

இந்தத் திட்டத்தைக் கண்டதும் அதை ஆராய்ந்து காந்தியடிகள் தமது ஹரிஜன் பத்திரிகையில் ஒரு கட்டுரை எழுதினர். அதன் சாரம் வருமாறு :

“ பிரிட்டிஷ் மந்திரி துரது கோஷ்டியாரும் வைவிரா யும் வெளியிட்டுள்ள அறிக்கையை நான்கு நாட்களாகத் துருவித் துருவி ஆராய்ந்தேன். இப்பொழுதுள்ள சந்தர்ப்பத்தில் இதைவிட அதிகச் சிறப்பான அறிக் கையை பிரிட்டிஷ் சர்க்கார் வெளியிட்டிருக்க முடியாது என்று எண்ணுகின்றேன்.

துாது கோஷ்டியார் இரண்டு கட்சியாரையும் கலந்து பேசுவதற்காக விம்லாவில் கூட்டி வைத்தார்கள். ஆல்ை இரண்டு கட்சியுாரும் எவ்விதமாகவும் ஒத்துவர முடியவில்லை. ஆனல் தாது கோஷ்டியார் இந்தியாவுக்கு சுதந்திர சாஸனம் தயாரிக்கும் விஷயத்தில் இரண்டு கட்சியாரையும் ஒன்று சேர்த்து வேலை செய்வதற்கு எது குறைந்தபட்ச தேவையோ அதைத் தாங்கள் அவர் களுடன் பேசி வந்ததிலிருந்து அறிந்து கொண்டார்கள்.

அதன்மேல் அவர்கள் சிறிதும் சோர்வடையாமல் டில்லிக்கு வந்து பிரிட்டிஷாருடைய கண்காணிப்போ செல்வாக்கோ எதுவுமில்லாத இந்திய சுதந்திரச் சாஸனத்