பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வகுப்பு வேற்றுமை 17

சேவையையும் எண்ணி விசேஷசலுகைகள் அளிக்கவேண் டும் என்றும் கேட்டுக்கொண்டார்கள்.

அதற்கு வைஸி ராய் மிண்டோ பிரபு “ அதுவேதான் என்னுடைய அபிப்பிராயம்” என்று கூறி 1909-ம் வரு ஷத்தில் தயாரித்த அரசியல் சட்டத்தில் “தனித்தொகுதி முறை “யைச் சேர்த்தார். அப்பொழுது இந்தியா மங் திரியாயிருந்த மார்லி பிரபுவுக்கு இது பிடிக்கவில்லை. இது வேண்டாம், இதல்ை அனர்த்தமே விளையும் என்று பன்முறை வைஸிராயிடம் சொன்னர். ஆயினும் ஏகாதி பத்திய ரத்தமே இறுதியில் வெற்றிபெற்றுவிட்டது. அன்றுமுதல் பிரிட்டிஷ் சர்க்கார் இந்தப் பூதத்தைக் காட்டி சுதந்திரம் கொடாமல் ஏமாற்றிவருகிறார்கள்.

அப்படி மிண்டோ பிரபு சிருஷ்டித்த “ வகுப்பு வேற்றுமை “ முதலில் ஹிந்து முஸ்லிமோடு கின்று, பின் ஞல் வந்தவர்களின் முயற்சியால் 1935-ம் வருஷத்து அரசி யல் சட்டத்தில் ஒரு டஜனுக்கு அதிகமாக பல்கிவிட்டது. அடுத்த முறை அரசியல் சட்டம் வகுக்கும்பொழுது அது இன்னும் எத்தனே குட்டிகளுடன் தோன்றுமோ தெரி

LLJIT ol.

ஜெட்லண்டு பிரபு இன்னுமொன்று கூறினர். ஒரு தேசம் மற்றாெரு தேசத்தைச் சுரண்டுமானல் அதுதான் ஏகாதிபத்தியக் கொள்கை என்று ஏகாதிபத்தியக்கொள் கைக்கு லட்சணம் வகுத்தார். அவர் வகுத்தது சரிதான். அதுதான் அதன் லட்சணம், அம்மட்டில் அவருக்கு வந்த னம் செலுத்த வேண்டியதுதான்.

ஆளுல் அந்தக் கொள்கை பிரிட்டிஷாரிடம் கிடையா தாம் - அப்படியே ஒருவேளை எந்தக் காலத்திலாவது இருந்திருந்தாலும் அது 1919-ம் வருஷத்து அரசியல் சட் டம் வகுத்த தினத்திலேயே அடியோடு ஒழிந்து விட்ட

தா.ம.

563—2