பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 பொழுது புலர்ந்தது

சர்க்காருடன் ஒத்துழைக்க வேண்டும். இதுதான் இரண் டாவது குறை.

(3) உள்நாட்டுக் கலகமும் அயல் காட்டுப் படை எடுப்பும் கேராதிருப்பதற்காகப் பிரிட்டிஷ் சேனையை சுதந்திரச் சர்க்கார் ஏற்படும் வரை இந்தியாவில் நிறுத்தி வைக்க வேண்டும் என்று திட்டம் கூறுகிறது. அப்படி கிறுத்தி வைத்தால் அது அரசியல் நிர்ணய சபையின் வேலையைச் சரியாக நடக்க வொட்டாமல் செய்துவிடும். அத்துடன் ஏற்படப்போவதாகச் சொல்லும் சுதந்திர சர்க்கார் ஏற்பட்ட பின்னர்கட்ட அந்தச் சேனையை இருக்கச் சொல்லும்படியான கிலேமையும் ஏற்பட்டு விடும். எந்த தேசம் தன்னுடைய பாதுகாப்புக்காக அன்னியப் படைகளே விரும்பவோ அல்லது அன்னியப் படைகள் தங்கியிருப்பதைச் சகித்துக் கொண்டிருக்கவோ செய்யுமோ அந்தத் தேசத்தை எந்த விதத்திலும் சுதந் திரம் அடைந்த தேசமாக ஒரு போதும் கூற முடியாது. அது சுயராஜ்யத்துக்குத் தகுதியில்லாத உபயோகமற்ற தேசமேயாகும். சுதந்தரத்துக்குத் தகுதியுடையதா, அன்றா என்பதை அது தனித்துத் தலை நிமிர்ந்து பிறர்க் குப் பணியாமல் கிற்கமுடியுமா என்பதைக் கொண்டே அறிய முடியும். சுதந்திரம் பெற்ற பின் நிமிர்ந்து நடக்க வேண்டுமானல், இடைக்காலத்தில் பிறர் உதவியின்றித் தத்தித் தத்தி நடக்கக் கற்றுக்கொள்ளுதல் அவசியம். பிறரால் ஊட்டப்படும் வழக்கத்தை இன்று முதலே கிறுத்திவிட வேண்டும். இது மூன்றாவது குறை.”

காந்திஜி சிபார்சு

இத்துணையும் கூறிவிட்டு இறுதியில், “ துரதுகோஷ்டியார் சொன்னபடி செய்யாமல்

பிரிட்டிஷ் ஆட்சியை சாஸ்வதமாக்கு வதற்கான வழி