பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 பொழுது புலர்ந்தது.

என்ற கிபந்தனேக்குட்பட்டு எந்த மாறுதல்களைச் செய்ய வும் அரசியல் கிர்ணய சபைக்கு சர்வ அதிகாரம் இருக்க வேண்டும்.

(4) சிட்ட சபைகளிலுள்ள ஐரோப்பிய மெம்பர் களுக்குத் தேர்தலில் கலந்து கொள்ள உரிமை கொடுத் திருப்பது தவறு.

(5) மாகாணச் சட்ட சபைகளிலுள்ள தேர்க் தெடுக்கப்பட்ட அங்கத்தினர்கள்தான் அரசியல் நிர்ணய சபைக்கு அங்கத்தினர்களைத் தெரிந்தெடுக்க வேண்டும். பலுச்சிஸ்தானத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அங்கத்தினர் உள்ள சட்ட சபையில்லை. குடகு சட்ட சபையிலுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அங்கத்தினர்கள்தான் அங்கத்தினர்களைத் தெரிந்தெடுக்க வேண்டும்.

(6) சமஸ்தானங்களிலிருந்து அரசியல் நிர்ணய சபைக்கு அங்கத்தினர்களைத் தெரிந்து எடுப்பது மாகாணங்களில் கையாளப்படும் முறைக்கு ஒத்ததாக யிருக்க வேண்டும்.

தொகுதி முறை

(7) மாகாணங்களைத் தொகுதிகளாகப் பிரிக்கும் விஷயத்தில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. அத் துடன் மாகாண சுய ஆட்சி என்னும் மூலாதாரமான உரிமைக்கு விரோதமாகவும் இருக்கிறது. அதல்ை மாகாணங்கள், அரசியல் கிர்ணய சபையின் ஆரம்பத் திலேயே தொகுதியில் சேர்வதா, சேர்வதில்லையா என்று முடிவு செய்ய உரிமையுண்டு என்பதாக வியாக்கி யானம் செய்ய வேண்டும். == is

=