உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொழுது புலர்ந்தது

து.ாதுகோஷ்டியார் பதில்

அாதுகோஷ்டியாரும் வைசிராயும் காங்கிரஸ் கமிட் டியின் தீர்மானத்திலும் ஜின்னுசாகிப்பின் அறிக்கையி அலும் கண்ட ஆட்சேபங்களுக்கு சமாதானங் கூறும் முறை யில் மே 25-ம் தேதி ஒரு அறிக்கை வெளியிட்டார்கள்.

அதன் சாரம் வருமாறு :

அரசியல் நிர்ணய சபை

(1) அரசியல் கிர்ணய சபையின் வேலையில் பிரிட் டிஷ் சர்க்கார் தலையிடாது, அந்தச் சபை அரசியலை வகுத்து முடித்தவுடன் பிரிட்டிஷ் சர்க்கார் ராஜ்யாதி காரத்தை இந்திய மகாஜனங்களிடம் ஒப்புவித்துவிட ஏற்பாடு செய்வார்கள்.

(2) பலுச்சிஸ்தானத்தில் ஷாஹிஜிர்கா அங்கத்தினர் களும், குவட்டா முனிசிபல் உத்தியோகப் பற்றற்ற அங் கத்தினர்களும் சேர்ந்து அரசியல் கிர்ணய சபைக்குத் தங் கள் பிரதிநிதியைத் தெரிந்தெடுப்பார்கள்.

(3) குடகில் உத்தியோகப்பற்றுள்ள மெம்பர்கள் தேர்தலில் கலந்துகொள்ள மாட்டார்கள்.

(4) ஐரோப்பியர்கள் தேர்தலில் கலந்து கொள்வ தும் கலந்து கொள்ளா திருப்பதும் அவர்கள் இஷ்டத் தைப் பொறுத்த விஷயம்.

(5) சமஸ்தானப் பிரதிநிதிகள் விஷயத்தை அரசி யல் கிர்ணய சபையே சமஸ்தானங்களுடன் பேசிமுடித் துக்கொள்ள வேண்டும்.