பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொழுது புலர்ந்தது

இடைக்கால சர்க்கார்

அதன்பின் இடைக்கால சர்க்காரைப்பற்றி காங்கிரஸ் கமிட்டியாருக்கும் வைஸ்ராய்க்கு மிடையில் கடிதப் போக்குவரத்து நடந்துகொண்டு இருந்தது. துாது கோஷ்டியாரும் வைசிராயும் காங்கிரசுக்கும் முஸ்லிம் விக்குக்கும் இடையில் இடைக்கால சர்க்கார் சம்பந்த மாக ஒரு ஒப்பந்தம் ஏற்படும்படிச் செய்ய முயன்றார்கள். ஆனல் அது பலன் பெறவில்லை. அதன்மேல் வைசி ராயும் தூது கோஷ்டியாரும் ஜூன் மாதம் 16ம் தேதி இடைக்கால சர்க்கார் சம்பந்தமாக ஒரு திட்டத்தையும் அந்த சர்க்காரில் அங்கத்தினர்களாக இருக்க வேண்டிய வர்களின் ஜாப்தாவையும் வெளியிட்டார்கள்.

அவர்கள் வெளியிட்ட திட்டத்தின் சாரம் வரு மாறு :

(1) இடைக்கால சர்க்காரில் அங்கம் வகிப்பவர்கள் து.ாது கோஷ்டியின் அரசியல் கிர்ணய சபைத் திட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

(2) அவர்கள் கிர்வகிக்கவேண்டிய விஷயங்கள் காங்கிரசுடனும் லீகுடனும் கலந்து முடிவு செய்யப்படும். (3) இந்தத் திட்டத்தை ஒப்புக்கொண்டால் இடைக் கால சர்க்கார் ஜூன் 26ம் தேதி அமைக்கப்படும்.

(4) காங்கிரசோ லிகோ சேர மறுத்தால் துரது கோஷ்டித் திட்டத்தை ஒப்புக்கொள்ளும் கட்சிகளுடைய பிரதிநிதிகளடங்கிய இடைக்கால சர்க்காரை அமைக்க வைசிராய் ஏற்பாடு செய்வார்.