பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்கால சர்க்கார் 255

கிராகரித்து விடுவது ‘ என்ற தீர்மானத்தை ஜுன்மாதம் 25-ம் தேதி நிறைவேற்றினர்கள்.

அந்தத் தீர்மானத்தின் சாரம் வருமாறு :

அரசியல் நிர்ணய சபை

(1) அரசியல் கிர்ணய சபைத் திட்டம் காங்கிரஸின் லட்சியங்களே கிறைவேற்றக் கூடியதாக யில்லே.

(2) மாகாணத் தொகுதி முறை சீக்கியர்களுக்கும், அஸ்ஸாமுக்கும், எல்லைப்புற மாகாணத்துக்கும், கியாயம் வழங்குவதாக இல்லை.

(3) ஆயினும் அரசியல் கிர்ணய சபையில் கலந்து கொண்டு சுதந்திர இந்திய அரசியலை வகுக்கத் தீர்மானிக் கிரு.ர்கள்.

இடைக்கால சர்க்கார்

(4) ஆனல் இடைக்கால சர்க்காருக்கு பரிபூரண சுதந்திர அந்தஸ்து அளிக்கப்படாததாலும் காங்கிரஸின் தேசியத் தன்மைக்கு முரணுகயிருப்பதாலும் காங்கிரஸ் கமிட்டியார், இடைக்கால சர்க்கார் திட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியாது.

(5) இடைக்கால சர்க்கார் தகுந்த முறையில் அமைக் கப்படாவிட்டால் அரசியல் கிர்ணய சபை வேலே ஒழுங் காக நடைபெருது என்று கருதுகிறார்கள்.

“ இந்த விதமான நல்ல முடிவு ஏற்படுவதற்கு நமது சென்னை மாகாணத் தலைவர் ராஜாஜி பெரிதும் காரணமா யிருந்தார் என்பது குறித்துப் பெருமையுடன் தலைநிமிர்ந்து நடக்க நமக்கு உரிமை உண்டு ‘ என்று “ கல்கி’ எழுதி யது முற்றிலும் உண்மையாகும்.