பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 பொழுது புலர்ந்தது

முஸ்லிம் லீக் தீர்மானம்

காங்கிரஸ் கமிட்டி இவ்விதம் தீர்மானம் செய்யவே முஸ்லிம்லீக் நீண்டகாலத் திட்டத்தையும் இடைக்காலத் திட்டத்தையும் ஏற்றுக்கொள்வதாகக் கூறிற்று. காங் கிரஸ் சேராவிட்டால் என்ன, ஒரு கட்சி சேராவிட்டா லும் இடைக்கால சர்க்கார் அமைப்பதை நிறுத்திவிட மாட்டேன் என்று வைஸி ராய் கூறினரே, அதனல் நாம் பதவி ஏற்று ராஜ்யாதிகாரம் கடத்துவோம் என்று எண்ணி தாங்கள் இடைக்கால சர்க்காரை அமைக்கத் தயாராக இருப்பதாக வைஸி ராயிடம் அறிவித்தார்கள். ஆனல் இடைக்கால சர்க்காரில் சேர முடியாது என்று கூறிய கட்சி சிறிய கட்சியா? அல்லது அலட்சியம் செய்ய கூடிய அளவு செல்வாக்கில்லாத கட்சியா? தேசத்தில் மகாப் பெரிய கட்சியாகவுள்ள காங்கிரஸ் கட்சியல்லவா? அதை விட்டு விட்டு எப்படி இடைக்கால சர்க்கார் அமைக்க முடியும்? அதல்ை காங்கிரஸ் கேட்ட கியாய மான உரிமையைத்தர முஸ்லிம்லீக் மறுத்து விட்டதால் வைஸி ராய் எண்ணியபடி இடைக்கால சர்க்காரை அமைக்க முடியாமல் போய்விட்டது.

வைசிராய் அறிக்கை

இடைக்கால சர்க்கார் அமைக்க முடியாது போனது குறித்து தூது கோஷ்டியாரும் வைசிராயும் ஜூன் 25-ம் தேதி ஒரு அறிக்கை வெளியிட்டார்கள்.

அதன் சாரம் வருமாறு :

(1) காங்கிரஸ் சபையும் முஸ்லிம் லீகும் சமஸ் தானங்களும் அரசியல் கிர்ணயசபைத் திட்டத்தை ஏற்றுக் கொண்டதைக் கண்டு சந்தோஷமடைகின்றாேம்.