பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 பொழுது புலர்ந்தது

கோஷ்டித் திட்டத்தை ஒப்புக்கொண்டதன் மூலம் அவற்றைக் கைவிட்டு விட்டார்கள். இனிமேல் ஏகமான இந்தியாவும் ஒரே அரசியல் கிர்ணய சபையும் ஒரே மத்திய சர்க்காரும் தான். ஆதலால் நமக்குக் கிடைத் துள்ள வெற்றியைத் தோல்வியாகச் செய்து விடா தீர்கள்” என்று கேட்டுக் கொண்டார்.

இறுதியில் அக்ராசனர் நேரு

“ காம் அரசியல் நிர்ணய சபையில் கலந்து கொள்வ. தால் எந்தத் திட்டத்தையும் ஒத்துக்கொண்டு விட்டதாக எண்ண வேண்டாம். அரசியல் கிர்ணய சபைக்குச் சென்றபின் அங்கே சரியாக வேலை நடைபெரு விட்டால் காம் வெளியே வந்து விடலாம். கம்மையாரும் தடுக்க முடியாது ‘ என்று கூறினர்.

அதன்மேல் தீர்மானம் பெருவாரியான வோட்டுக் களால் நிறைவேறியது.