பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 பொழுது புலர்ந்தது

ஆல்ை சிந்து மாகாண கவர்னர் முஸ்லிம்லி கிடம் மிகுந்த பரிவுடையவர். முஸ்லிம் லீகுக்குச் சட்டசபையில் மெஜாரிட்டி பலமில்லாதிருந்தும் அவருடைய தயவின லேயே அது அங்கே உயிருடன் இருந்து கொண்டி ருக்கிறது. ஆயினும் அவருக்கு 16-ந்தேதி விடுமுறை விடுவது பிடிக்கவில்லே. ஐ. ஸி. எஸ் காரரா யிருந்து அனுபவம் பெற்றவராதலால் அனர்த்தங் கள் ஏற்படும் என்று அறிவார். ஆதலால் அவர் பிரதம காரியதர்சி மூலம் விடுமுறை விடுவது சட்டவிரோத மானது என்று கூறி ரத்துசெய்தார். அதனல் அந்த மாகாணம் அட்டுழி யங்களுக்கு ஆளாகாமல் பிழைத்துக் கொண்டது.

ஆல்ை வங்காள கவர்னரோ இவ்விதம் அறிவோடும் தைரியத்தோடும் நடந்துகொள்ளவில்லை. வங்காளச் சட்டசபையிலுள்ள தேசிய வாதிகள் எல்லோரும் விடு முறை விடுவது கூடாது, விடுமுறை அளித்தால் கலகங் கள் உண்டாக அதிக வசதியா யிருக்கும் என்று கூறினர் கள். ஐரோப்பிய மெம்பர்களும் அப்படியே கூறினர்கள். ஆனல் பிரதம மந்திரி சுஹர்வர்த்தி அவர்கள் கூறிய எச் சரிக்கைக்குச் செவிசாய்க்காமல் இருந்துவிட்டார்.

அதன்பின் முஸ்லிம் லிகர்கள் “ இந்த மாதம்தான் ரம்ஜான் மாதம். இந்த மாதத் தில்தான் குர்ஆன் வெளியிடப்பட்டது. இந்த மாதத் தில்தான் மகமது நபிநாயகம் ஆனர். இந்த மாதத்தில்தான் மெக்காவில் இஸ்லாம் மதவிரோதிகள் வேரறுக்கப் பட்டார்கள். இந்தமாதத்தைத்தான் பாக்கிஸ்தானுக்காக போர்துவக்குவதற்கு அகில இந்திய முஸ்லிம் லீக் தேர்ந் தெடுத்திருக்கிறது ‘ என்று நகரமெங்கும் துண்டுப் பிர சுரங்களே வழங்கினர்கள். so

பச்சை கிறச் சட்டைகள் அணிந்த முஸ்லிம் லீகர்கள் லாரிகளில் ஏறிக்கொண்டு தர்ம யுத்தம் ‘ என்றும்