பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 பொழுது புலர்ந்தது

எதிர்ப்பு செய்யப் போவதாகச் சொன்னது உண்மை யில்லை என்பது விளங்கும்.

இதுமட்டுமன்று. பிரிட்டிஷ் சர்க்காரை எதிர்த்து நேரடியான எதிர்ப்பு கடத்தியிருந்தால் வங்காள கவர் னர் உடனேயே ராணுவத்தையும் போலீஸையும் உபயோ கித்திருக்க மாட்டாரா? காங்கிரஸ்காரர்கள் 1942 ஆகஸ் டில் பிரிட்டிஷ் சர்க்காருக்கு விரோதமாகப் போராட்டம் கடத்தவுமில்லே, நடத்தப் போவதாகக் கூறவுமில்லை. அப் படி யிருந்தும் அரசாங்கம் போலீஸையும் ராணுவத்தை யும் காங்கிரஸ்காரர்கள் மீதும் ஜனங்கள் மீதும் அவிழ்த்து விட்டுவிடவில்லையா? இதிலிருந்தும் ஜின்ன போர் துவக் கியது பிரிட்டிஷ் சர்க்கார் மீது அன்று என்பதும் காங் கிரஸ்காரர்மீதும் ஹிந்துக்கள் மீதுமே என்பதும் வெட்ட வெளிச்சமாக விளங்குகின்றன.

கல்கத்தாவில் கடந்தது போலவே பம்பாய் முதலிய வேறு சில நகரங்களிலும் ஆகஸ்ட் 16-ந் தேதி கலவரங் கள் நடைபெற்றன. ஆனல் அவைகள் எல்லாம் கல்கத் தாவில் கடந்தது போல அவ்வளவு கோரமாக நடைபெற வில்லை. அத்துடன் அவைகள் அதிசீக்கிரத்தில் அடக்கப் பட்டும் போயின. அங்குள்ள காங்கிரஸ் சர்க்கார்கள் அப்படி ஏதேனும் நடைபெறக்கூடும் என்று எண்ணி முன் கூட்டியே போலீஸையும் ராணுவத்தையும் தயா ராக வைத்திருந்தார்கள்.

காந்திஜி கருத்து

சிந்து மாகாணத்திலுள்ள முஸ்லிம் லீக் மந்திரிகளும் தலைவர்களும் பச்சை பச்சையாக பலாத்காரத்தைப் போதித்துக் கொண்டிருப்பதாகப் பத்திரிகைகளில் செய்திகள் வந்து கொண்டிருந்தன.