பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அயராஜ்ய ஆரம்பம் 275

ஆண்ல் சிலர் இது உண்மையான சுதந்திரமாகுமா, இன்னும் பிரிட்டிஷ் சேனே இந்தியாவைவிட்டு வெளி யேறவில்லையல்லவா என்று சந்தேகப்படுகிரு.ர்கள்.

எலுமிச்சங்காய் ஊறுகாய் எல்லோரும் அறிவார் கள். ஊறுகாய் போட்ட அன்றாே அல்லது சில நாட் களிலோ அதைக் கழுவிப்பார்த்தால் எலுமிச்சங் காயின் வாரனேயே தெரியும். உப்பின் வாசனையும் மிளகாயின் வாசனேயும் அவ்வளவாகத் தெரியமாட்டா.

ஒன்றிரண்டு மாதங்கள் சென்றபின் கழுவிப் பார்த் தால் எலுமிச்சங்காய் வாசனேயும் தெரியும், உப்பு மிளகாய் வாசனையும் தெரியும். -

ஆனல் ஒரு வருஷம் கழிந்தபின் ஊறுகாயை எத் தனே முறை கழுவிப் பார்த்தாலும் எலுமிச்சங்காய் வாசனை எள்ளளவுகூடத் தெரியமாட்டாது, உப்பு மிளகாய் வாசனை மட்டுந்தான் தெரியும்.

அதேபோல்தான் அடிமையாகும் விஷயமும். அதிகக் காலம் அடிமையாயிருந்து விட்டபடியால் நாம் சுதந்திர வாசனையை அடியோடு மறந்துவிட்டோம். சூரியன் உதயமானலும் குருடருக்கு எப்படி இருளாகவே தோன்றுமோ அப்படியேதான் இப்போது சுதந்திர சர்க்கார் ஏற்பட்டுங்கூட இன்னும் சிலர் இப்படிச் சந்தேகப்பட்டுக்கொண்டே இருக்கின்றனர்.

அதற்குக் காந்தியடிகள் “ ஆம், இன்னும் பரிபூரண சுதந்திரம் அடைந்துவிடவில்லை என்பது உண்மைதான். ஆறல் சுதந்திர தேவியின் ஆலயத்தின் வாசல் திறந்து விட்டது. இந்தச் சந்தர்ப்பத்தை நாம் சரியாக உபயோ த்ெதுக் கொண்டால் நம்முடைய லட்சியம் சித்தியாய் விடும் என்பதில் சந்தேகமில்லை’ என்று கூறுகிறார் ஆம்,