பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொழுது புலர்ந்தது

அனுபந்தம் முஸ்லிம் லீக் வருகை

1946 செப்டம்பர் 2-ம் தேதியன்று தேசீய (இடைக் கால) மந்திரி சபையின் பதவி ஏற்பு வைபவம் வைஸி ரா யின் மாளிகையில் நடைபெற்றது. அன்றே சர்க்கார் காரியாலயங்களில் எல்லாம் பெரும் மாறுதல்கள் காணப் படலாயின. இப்பொழுது ஏற்பட்டிருக்கும் சர்க்கார் பழைய நிர்வாக சபையன்று, உண்மையிலேயே தேசிய மந்திரி சபைதான் என்பது கிதர்சனமாக விளங்க லாயிற்று. பண்டித ஜவஹர்லால் நேரு அந்த மந்திரி சபையின் உபதலைவர் ஆனர். வைஸி ராய் வேவல்தான் தலைவர் ஆலுைம் பேருக்கு மட்டும்தான். அத்துடன் சர்வ தேச விவகாரங்களிலும் நேரு செய்ய ஆரம்பித்த காரியங்கள் மின்னல் வேகத்தில் நடைபெறலாயின.

முஸ்லிம் லீக் சேராததால் இடைக்கால சர்க்கார் கன்றாக நடைபெருது ; கிர்வாகம் ஸ்தம்பித்துப் போகும் என்று ஜின்ன சாகேப் எண்ணிக் கொண்டிருந்தார். ஆனல் தேசீய மந்திரி சபை கடந்துவரும் முறையையும் அடைந்துவரும் புகழையும் கண்டதும் அவர் என்ன செய்வது என்று திகைத்தார்.

உடனே வங்காள பிரதம மந்திரி ஜனப் சுஹர்வர்த்தி. ஜின்ன சாகேபிடம் போய் ஏதேதோ பேசி வந்தார். அதன்பின் போபால் சமஸ்தானதிபதியாகிய நவாப் சாகேப் காங்கிரஸுக்கும் லீகுக்கும் சமரஸம் ஏற்படுத்தி