பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 பொழுது புலர்ந்தது

அக்கிரமம் கடந்த சமயம் அடக்காமல் சும்மாயிருந் தார்கள்.

இந்த விஷயங்களை எல்லாம் ஆச்சார்யா கிருபளானி வந்து கூறுவதற்கு முன்னரே காங்கிரஸ் காரியக் கமிட்டி யார் அக்டோபர் 24-ம் தேதி அக்கிரமங்களைக் கண்டித்து ஒரு தீர்மானம் நிறைவேற்றினர். அதன் சாரம் வரு மாறு :

‘ அங்கு நடக்கும் அக்கிரமங்கள் இவ்வளவு கோர மானவை என்று அறிந்து கொள்வதற்கு வங்காள சர்க் காரும் பிரதம மந்திரியும் விடுத்த அறிக்கைகளே போதும்.

இந்தப் பேயாட்டத்துக்குக் காரணம் முஸ்லிம் லீக் சில வருஷங்களாகச் செய்துவந்த வகுப்புவாதத் துவேஷப் பிரசாரம்தான் என்பதில் சந்தேகமில்லை.

இதன் பொறுப்பு முழுவதும் வங்காள சர்க்காரையே சாருமாயினும் வங்காள கவர்னரும், வைசிராயும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளாமலிருக்க முடியாது.

இந்த அக்கிரமங்கள் எல்லாம் தேசீயத்தை நசுக்கி விடுவதற்காகவே நடைபெறுகின்றன. ஆனல் வகுப்பு வாதத்தை தேசியத்தால்தான் வெல்ல முடியுமேயன்றி வகுப்புவாதத்தால் முடியாது. வகுப்புவாதம் அன்னிய ஆட்சியை நிலைத்திருக்கவே செய்யும். ஆதலால் ஹிந்துக் கள் பழி வாங்க அணுவளவு கூட எண்ணலாகாது.”

இந்த விதமாக வங்காளத்தில் முஸ்லிம் லீகின் ஆட்சி நடந்து வரும்பொழுது யாரேனும் காட்டின் பாதுகாப்பு இலாக்காவை முஸ்லிம் லீகிடம் கொடுக்க முடியுமா ?

இந்தவிதம் காங்கிரஸ் கமிட்டியார் உள்நாட்டுப் பாதுகாப்பு, வெளிநாட்டுப் பாதுகாப்பு இரண்டையும் அதாவது போலீஸையும் இராணுவத்தையும் முஸ்லிம்