பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 பொழுது புலர்ந்தது

(4) ஆனல் சுதந்திரம் என்பது கஷ்டப்பட்டே அடையக்கூடிய உரிமையாகும்.

(5) அத்துடன் நமது சாதனம் அஹிம்சை கமது போர்முறை சத்யாக்ரகம் என்பதை மறக்கக் கூடாது.

(6) ஆதலால் சத்யாக்ரகப் போர்முரசு கொட்ட நேரிட்டால் அப்பொழுது போரில் இறங்கத் தயாராக இருப்பதற்காக கிர்மாணத் திட்டத்தில் முனேந்து கிற்க வேண்டும்.

ஆகவே காங்கிரஸ் கமிட்டியார்க்கு ஜெட்லண்டு பிரபுவின் வேற்றுமை “ப் பிரசங்கம் கண்டு பெருங் கோபம் உண்டாயிற்று என்பதில் சந்தேகமில்லை. ஆயினும் அவர்கள் அதற்காக ஆத்திரப்பட்டு எதுவும் செய்ய விரும்பாமல் சமாதானத்தையே நாடி நின்றார்கள். அப்படிச் சமாதானத்தை நாடி கின்றாலும், பிரிட்டனுக்கு சுயராஜ்யம் தேடித் தந்த ஆலிவர் கிராம்வெல்,

‘ கடவுளை நம்புங்கள், வெற்றி தருவார், ஆயினும் வெடி மருந்துகளை நனைந்து போகாமல் பார்த்துக் கொள் ளுங்கள் ‘

என்று தம் படைகளுக்குக் கூறினரே, அதையே தாங்களும் கடைப்பிடிக்க எண்ணி,

“ சமாதானத்துக்கு முயல்வோம், ஆயினும் சத்யாக்ர கத்துக்குத் தகுதியுடையவர்களாக ஆக்கிக் கொள் ளுங்கள் “

என்று தேசத்துக்கு உபதேசம் செய்தார்கள். பிரிட்டிஷார் இந்தியா சுதந்தரம் அடைய முடியாத படி வகுப்பு வேற்றுமை, வகுப்பு வேற்றுமை என்று முட்டுக்கட்டை போட்டு வருகிறார்களே, அந்த முட்டுக் கட்டையைச் சீவித் திருத்தித் தயாரித்தவர்கள் அவர்களே தாம் என்பதை முன்னல் கண்டோம்.