பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொழுது புலர்ந்தது

மு. ஸ் லி ம் லீ க்

ஆயினும் அந்த முட்டுக்கட்டையை உபயோகிப் பதற்கு அனுகூலமாக நிற்பவர் முஸ்லிம் லீக் தலைவர் ஜின்ன சாகேப் ஆவார். அவர் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராய் இருந்தவர். அந்தக் காலத்தில் அரசியலில் “ மத வேற்றுமை “களைக் கலப்பது அடாது என்று அழுத்தமாகக் கண்டித்தவர். அதனுல் மெளலான மகமது அலியை ‘மெளலான ‘ என்று அழைக்க மாட்டேன், “ மிஸ்டர் “ என்றுதான் அழைப்பேன் என்றுகட்டக் கூறியவர். அவ்வளவு தூரம் தேசிய உணர்ச்சி ததும்பிய அந்த ஜின்ன சாகேப்,இப்பொழுது நம்முடைய தேசத்தின் துர்அதிர்ஷ்டத்தால் வகுப்புவாத சிரோன்மணியாக ஆயிருக்கிறார்,

அவர் 1934-ம் வருஷத்தில் முஸ்லிம் லீகிலிருந்து தேசீயத்தை விலக்கி, தனி வகுப்பு ஸ்தாபனமாகச் செய்து அதற்குப் பலம் தேட ஆரம்பித்தார். ஆனல் முஸ்லிம்கள் அவருக்கு ஆதரவு அளிக்க முன்வரவில்லை. முஸ்லிம் களுக்கென்று தனித் தொகுதி ஏற்பட்டிருந்துங்கூட, முஸ்லிம்களில் 4 சதமானவர்களே, முஸ்லிம் லீக் அபேட் சகர்களுக்கு 1937-ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் வோட் டுச் செய்தார்கள். அந்தத் தேர்தலில் காங்கிரஸ்காரர் களுக்கே அமோகமான வெற்றி கிடைத்தது. அவர்களே எட்டு மாகாணங்களில் மந்திரி சபைகள் அமைத்தார்கள். அதைக் கண்டு அரசாங்கம் பயந்துவிட்டதோ என்னவோ, அன்றுமுதல் முஸ்லிம் லீகுக்கு அதிகமான ஆதரவு