பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 பொழுது புலர்ந்தது

அளிக்க ஆரம்பித்தது. அரசாங்க ஆதரவுள்ள எந்த ஸ்தாபனமும் அதிசீக்கிரத்தில் பலமும் செல்வாக்கும் பெற்றுவிடும் என்பது யாவரும் அறிந்த விஷயம்.

ஆதலால் வைஸி ராயும் காங்கிரஸ் கமிட்டியாரும் அரசியல் விஷயமாகப் பேசும்போதெல்லாம் ஜின்ன சாகேப் என்னுடைய நிபந்தனைப்படியன்றி எவ்வித அதிகார மாற்றத்துக்கும் சம்மதிக்க மாட்டேன் என்று முட்டுக்கட்டை போட்டு வந்தார்.

இப்போது 1939 டிஸம்பர் 15ம் தேதி ஜெட்லண்டு பிரபு செய்த பிரசங்கத்தைக் கண்டித்து காங்கிரஸ் கமிட்டியார் 22-ந்தேதி சத்யாக் ரகப் போர்க்குத் தகுதி யுடையவர்களாக ஆகும்படி தேசத்துக்கு வேண்டுகோள் விட்டனரே, அந்தச் சமயம் ஜின்ன சாகேப் என்ன செய்தார் ?

காங்கிரஸ் கமிட்டியார் சுதந்திரம் கொடுப்பதாகச் சொல்லுங்கள், அதிகாரத்தை மாற்ற ஏற்பாடு செய்யுங் கள், நாங்கள் ஒன்றுபட்டு விடுவோம், உங்கட்கு வேண் டிய உதவியும் செய்வோம்-என்று கூறினர்கள்.

அதுபோல் சொன்னரா ஜின்ன சாகேப்? அவரும் அதுபோல் சொல்லியிருக்கக் கூடாதா? அதுபோல் சொல்லவேண்டாம், சும்மாவாவது இருக்கக்கூடாதா? அவர் என்ன செய்தார் தெரியுமா?

ஜனப்பிரதிநிதிகளிடம் கேளாமல் தேசத்தின் தலேயில் சண்டையைத் தூக்கி வைத்துவிட்டதைக் கண்டிப்பதற்காக காங்கிரஸ் மந்திரிகள் ராஜிநாமாச் செய்தார்கள் அல்லவா? அதை உடனே ஜின்ன சாகேப் தமக்குக் கிடைத்த வெற்றியாக எண்ணிக்கொண்டு, டிஸம்பர் 22ம் தேதியை விடுதலை ” தினமாகக் கொண் டாடுமாறு தமது முஸ்லிம் லீகர்களுக்கு உத்தரவிட்டார்.