பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 பொழுது புலர்ந்தது

காங்கிரஸ் மந்திரி சபைகள் முஸ்லிம்களுக்கு இழைத்த அநீதிகளைப்பற்றி விசாரித்து முடிவு செய்வதற் காக பிரிட்டிஷ் அரசாங்கம் ஒரு ராயல் கமிஷனே அனுப்ப வேண்டும் என்று சர்க்காரிடம் வேண்டிக்கொண்டார்.

இதன் பொருள் யாது ? சர்க்கார் தாங்களாகவே சாக்குப்போக்குச் சொல்லிக் காலங் கடத்திக் கொண் டிருக்கிறார்கள். அப்படி அவர்கள் காலங் கடத்துவதற்கு இவருடைய ராயல் கமிஷன் யோசனை நெருப்புக்கு நெய் வார்த்ததுபோல் இருக்கும்.

அதைவிட மோசமானது வேருென்று-அப்படி ஜனப்பிரதிநிதிகள் அமைத்த மந்திரி சபைகள் செய்த காரியங்களை பிரிட்டிஷார் விசாரித்து முடிவு செய்வது என்பது இந்தியர்க்கு அரசாளத்தகுதி உண்டா இல்லையா என்பதை பிரிட்டிஷார்தாம் முடிவு செய்யவேண்டிய வர்கள் என்பதாகும். அரசாளத் தெரியுமோ தெரி யாதோ அவரவர்கள் வீட்டுக்கு அவரவர்களே அதிகாரி கள் என்னும் மனித தர்மதிேயை அரசாங்கத்தார் மறந்து விடுவதுபோலவே இவரும் மறந்துவிட்டார்.

அதல்ை காந்தியடிகளும் பண்டித நேருவும் இந்த இரண்டு யோசனைகளையும் விட்டு விடும்படிபாக ஜின்ன சாகேபுக்கு எழுதினர்கள். ஆனல் அவர் அதைக் கேளா மல் விடுதலே தினத்தைக் கொண்டாடியே முடித்தார். விசாரணை செய்தால் காங்கிரஸ் மகாசபையே அதிக பலம் பெறும் என்பது சர்க்காருக்கு நன்றாய்த் தெரியும். அதல்ை அவர்கள் அந்த யோசனையை ஏற்றுக்கொள்ளா திருந்து விட்டார்கள்.