பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொழுது புலர்ந்தது

ராம்கார் காங்கிரஸ்

காங்கிரஸ் காரியக் கமிட்டியார் சர்க்காரைப் பார்த்து (1) உங்கள் யுத்த நோக்கத்தைத் தெளிவாகக் கூறுங்கள் (2) இந்தியாவுக்குப் பூரண சுதந்திரம் அளிப்பதாக வாக் களியுங்கள் (3) யுத்த காலத்தில் சாத்தியமான அளவு அதிகாரத்தை ஜனப்பிரதிநிதிகள் கையில் கொடுங்கள் என்று கூறினர்கள்.

வைஸி ராய் லின் லித்கோ பிரபு அவர்களைத் தம் வசப்படுத்த பலமுறை முயன்றும் வெற்றி காணவில்லை. வேற்றுமைப் பூதத்தைக் காட்டி மருட்டப் பார்த்ததும் பலிக்கவில்லை. காங்கிரஸ் காரியக் கமிட்டியார் இந்திய மகா ஜனங்களின் பிரதிநிதிகளாகையால் தங்கள் கோரிக் கையில் கொஞ்சமும் குறைத்துக்கொள்ள விரும்பவில்லை. இவ்விதம் அவர்கள் ஒரே உறுதியா யிருப்பதைக் கண்ட தும் லின் லித்கோ பிரபு தாம் முன்னல் 17-10-39ல் வெளி யிட்ட யோசனைகளே மாற்றி 10-1-40ல் பம்பாயில் ஒரி யண்ட் கிளப்பில் செய்த பிரசங்கத்தில் புதிய யோசனை ஒன்று கூறினர்.

அந்த யோசனையின் சாரம் வருமாறு :

(1) இந்தியா இஷ்டப்பட்டால் பிரிட்டனிடமிருந்து பிரிந்து கொள்ளக்கூடிய உரிமையோடு கூடிய பூரண டொமினியன் அந்தஸ்துபெற வேண்டும் என்பதே பிரிட். டிஷ் சர்க்காரின் நோக்கம்.