பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராம்கார் காங்கிரஸ் 33

அதல்ை காங்கிரஸ் மகாசபை உடனே சட்ட மறுப் பில் இறங்கவேண்டுமென்று தீர்மனியாமல் பாட்ை தீர்மானத்தையே ஏகமனதாக கிறைவேற்றிற்று.

தீர்மானம் சட்ட மறுப்பைப் பற்றிப் பிரஸ்தாபித் தாலும் அதை உடனே ஆரம்பிக்கவேண்டும் என்று கூற வில்லை. மகாத்மா காந்தியடிகளும் சட்ட மறுப்புக்கு நான் ஆத்திரப் படவில்லை, அது நடவாமல் தடுக்கவே ஆத்திரப்படுகிறேன் என்று தெளிவாகக் கூறினர்.

அப்படியிருந்தும் காங்கிரஸ் விரோதிகள் பிரிட்டன் போரில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் சமயம்பார்த்து அதற்குத் தொல்லே கொடுக்கவே காங்கிரஸ் மகாசடை திட்டம் போட்டிருக்கிறது என்று பொய்யாகப் பிரசாரம் செய்ய ஆரம்பித்தார்கள்.

அதைக் கண்டதும் காந்தியடிகள் காங்கிரஸ் இது வரை சர்க்காருக்கு எவ்வித தொல்லேயும் கொடுக்கவில்லை, இனிமேலும் கொடுக்க விரும்பவில்லை என்று அறிக்கை வெளியிட்டார்.

ஆதலால் அவர் பிரிட்டனுக்குத் தொல்லே கொடாத முறையில் சட்ட மறுப்பு ஆரம்பிப்பதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளைச் செய்யுமாறு காங்கிரஸ் கமிட்டிகளுக்கு உத்தரவிட்டார். அப்படியே 1940-ம் வருஷம் ஏப்ரல் மாகத்தில் சட்டமறுப்பு ஆரம்பிப்பதற்கான சகல் சாத்விக வற்பாடுகளும் நடைபெறலாயின.

563–3