பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொழுது புலர்ந்தது

பூனக் கோரிக்கை

காட்டில் சத்யாக்ரக இயக்கம் ஆரம்பிப்பதற்கு வேண்டிய காரியங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த அதே சமயத்தில் ஹிட்லரின் சேனைகள் டென்மார்க், ஹாலந்து பெல்ஜியம் ஆகிய தேசங்களைக் கைப்பற்றி விட்டன. பிரிட்டனுடன் சேர்ந்திருந்த பிரான்ஸ் தேசம் ஹிட்லருக்குச் சரணடையும் தறுவாயில் இருந்தது. கார்வே தேசமும் ஜெர்மன் வசமாய்விட்டது.

ரஷ்யா ஜெர்மனியுடன் சேர்ந்து, பக்கத்திலிருந்த சிறு நாடுகளைத் தன் வசமாக்கிக் கொண்டிருந்தது. பிரிட்டன் ரஷ்யாவைத் தன் பக்கம் திருப்ப முயன்றது, அந்த முயற்சி வெற்றிபெறவில்லை.

ஜப்பான் சைைைவச் சரணடையச் செய்ய முயன்று கொண்டும், வெள்ளைக்கார தேசங்கள் ஆசியாவில் தலை யிடக் கூடாது என்று எச்சரிக்கை செய்துகொண்டு மிருந்தது. பர்மா வழியாக எதுவும் சைனவுக்குக் கொண்டுபோக அனுமதிக்கக் கூடாது என்று பிரிட்ட லுக்குத் தாக்துே அனுப்பியது. பிரிட்டனும் ஆகட்டும், அப்படியே செய்கிறேன் என்று “பர்மா பாதை"யை மூடி விட்டது.

அமரிக்கா ஏதோ உதவி சிறிது சிறிதாக அனுப்பிக் கொண்டிருந்ததே யன்றி இன்னும் பிரிட்டனுடன் சேர்ந்து கொள்வதற்கான அறிகுறி ஒன்றும் தோன்றவில்லை.