பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 பொழுது புலர்ந்தது.

வுக்கும் தென் ஆப்பிரிக்காவும் காலாகாலத்தில் சுதந்திரம் அளித்தோமே, என்ன கேடு உண்டாயிற்று? அதுபோல் இந்தியாவுக்கும் அது மனம் கசந்து நம்மை வெறுக்கு முன்னரே சுதந்திரம் அளிப்பதே நல்லது. அதனல் அபாயங்கள் வந்தாலும் வரலாம், ஆனல் நாம் எந்தக் காலத்திலும் அபாயத்தை நீக்கிக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை உடையவர்கள் அல்லரா?’ என்று கூறினர். அதல்ை இந்தியா மந்திரி அமரி என்றதும் சிலர் மனத்தில் திருப்தி உண்டானது இயற்கையே.

ஆனல் அவர் பார்லிமெண்டில் இந்தியா விஷயமாகப் பேச ஆரம்பித்ததும் தம்முடைய சுய சொரூபத்தைக் காட்டலானர். ‘ அடிப்படையான விஷயங்களைக்குறித்து அபிப்பிராய பேதங்கள் உளவே. அப்படியிருக்க அதிகாரத்தை மாற்றுவது எப்படி?” என்று கேட்டார். ஆகவே ஆள்தான் மாறியதேயன்றி அபிப்பிராயமும் கொள்கையும் மாறவே இல்லை.

ஆயினும் காந்தியடிகள்- பிரிட்டன் அழிய நாம் சுதந்திரம் பெற விரும்பவில்லை. சட்ட மறுப்பு ஆரம்பிப் பதற்கு பிரிட்டன் உயிருக்காகத் திண்டாடும் இந்தச் சமயம் ஏற்றதன்று “ என்று 21-6-40 ஹரிஜன் பத்திரி கையில் எழுதினர்.

காங்கிரஸ் கமிட்டியாரும் அதே தேதியில் வார்தா வில் கூடி நிலைமையைப் பரிசீலனை செய்தார்கள். இது வரை மகாத்மாகாந்தியடிகளின் போதனையை ஏற்று நாட்டில் எது செய்தாலும் அஹிம்சா முறையிலேயே செய்து வந்தார்கள். ஆனல் இப்பொழுது சுயராஜ்ய இயக்கம் ஒன்றே அஹிம்சா முறையில் நடத்துவது ; அயல் நாட்டுப் படை எடுப்பையும் உள்நாட்டுக் குழப்பங் களையும் எதிர்க்க ஹிம்சை முறையை உபயோகிப்பது என்று முடிவு செய்தார்கள். அந்த முடிவையொட்டி