பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூனக் கோரிக்கை 37

காங்கிரஸ் வாதிகள் சர்க்கார் அமைத்துள்ள யுத்த சபை களிலும் பாதுகாப்புப் படைகளிலும் சேரக்கூடா தாயினும் தனியாக பாதுகாப்புச் சங்கங்கள் அமைத்துக் கொள்ள வேண்டும் என்று யோசனை கூறினர்கள்.

மகாத்மா காந்தியடிகள் எந்தச் சமயத்திலும் அஹிம்சை முறையை விட்டு அணுவளவும் பிறழலாகாது என்று கண்டிப்பாய் கூறுகிறவர் அல்லவா? அதனல் அவர் காரியக் கமிட்டியாரிடமிருந்து பிரிந்து கொண்டார். ஆல்ை இந்த ஒரு விஷயத்தில் மட்டுந்தான் அவருக்கும் அவர்களுக்கும் வித்யாசம் ஏற்பட்டதேயன்றி இதர விஷயங்களில் எல்லாம் எவ்விதமான அபிப்பிராய வேற்றுமையும் உண்டாகவில்லை.

புதிய யுத்த நிலைமையில் புதிய யோசனை ஏதாவது உண்டா என்று அறியும்பொருட்டு காந்தியடிகள் 29-6-40-ல் வைஸி ராயைப் பேட்டிக் கண்டார். அதன் விபரத்தை காரியக்கமிட்டியாரிடம் வந்து கூறினர். அவர்கள் அதைக் குறித்து 30 மணி நேரம் ஆலோசித்த பின் ஜூலை 7-ம் தேதியன்று ஒரு யோசனையை வெளி யிட்டார்கள். அந்த யோசனையை ஜூலை 27-ம் தேதி புவிைல் கூடிய அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியார் ஊர்ஜிதம் செய்தார்கள்.

அதுவே “ காங்கிரஸின் புனு யோசனை ‘ என்று பெயர் பெறும். அதன் சாராம்சமாவது :

(1) அரசியல் பிரச்னை தீர்வதற்கு அரசாங்கம் பரி பூரண சுதந்திரம் அளிக்க ஒப்புக்கொள்வது ஒன்றே மார்க்கம்.

(2) அப்படி ஒப்புக்கொண்ட பின்னர், அதன் முதற் படியாக இப்பொழுதுள்ள மத்ய சட்டசபைகளிலுள்ள தேர்ந்தெடுக்கப்பெற்ற அங்கத்தினர்களுடைய நம்பிக்