பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 பொழுது புலர்ந்தது

கைக்குப் பாத்திரமான தேசிய சர்க்காரை அமைக்க வேண்டும்.

(3) இந்த இரண்டும் நடைபெறுமானல் காங்கிரஸ் மகாசபை தேசத்தின் பாதுகாப்பிற்கான சகல காரியங் களிலும் முழு மூச்சாக ஈடுபடும்.

ஆகவே யுத்தத்தில் இந்தியாவுக்கு நேரடியான சம் பந்தம் எதுவு மில்லாவிட்டாலும், பிரிட்டனுக்கு அபாயம் வந்துள்ள இந்தச் சமயத்தில் இந்தியா விலகி கிற்க விரும்பவில்லை. பிரிட்டனுடன் சேர்ந்து நாஜிஸத்தையும் பாஸிஸத்தையும் நசுக்கி அழித்துவிட ஆசைப்பட்டது. அதற்காக பாரத பூமிக்குப் புத்துயிர் அளித்த மகான் காந்தியடிகளையுங்கூட விலக்கிவிட்டுவிடத் தயாராயிற்று. மத்திய சபைகளுக்குப் புதிய தேர்தல்கூட நடத்த வேண் டாம், இப்பொழுதுள்ள அங்கத்தினர்க்கு ஜவாப்தாரி யான தேசீய மந்திரிசபை ஏற்படுத்தினுல் போதும் என்று தன்னுடைய கோரிக்கையை அதிகமாகக் குறைத்துக் கொள்ளவும் சம்மதித்தது.

பூரண சுதந்திரப் பிரகடனம் செய்யுங்கள்தேசிய சர்க்கார் ஏற்படுத்துங்கள்-அப்பொழுதுதான் நாங்கள் ஜனங்களே இந்த யுத்தத்தில் முழு மன துடன் சேரும்படி செய்ய முடியும்-ஜெர்மனி வந்து விட்டது என்று பயமுறுத்துவதைவிட சுதந்திரம் கிடைத்துவிட்டது என்று உற்சாகப்படுத்துவதே சரியான மார்க்கம் என்று ராஜாஜி கூறினர்.

காங்கிரஸ் கமிட்டியார் தேசிய சர்க்கார் அமைத்தால் யுத்த முயற்சிகளில் கலந்துகொள்வதாகத் தீர்மானித்த தோடு அமையாது, அந்த யோசனையை ஜின்ன சாகேபும் ஏற்றுக்கெண்டால் நல்லதல்லவா, அப்பொழுதுதானே தேசிய சர்க்கார் அமைப்பதில் கஷ்டம் உண்டாகாது, சீக்கிரமாகத் தேசத்தைத் திரட்டலாம் என்றும் எண்ணி