பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சர்க்காரும் சத்தியாக்ரகமும் 45

=- ---

“ தேசிய சர்க்கார் அமைப்பதாகக் கூறுங்கள். நான் காங்கிரஸ் கமிட்டியாரை முஸ்லிம் லிகே தேசிய சர்க் காரை அமைத்துத் தலைமை வகிப்பதற்குச் சம்மதிக்கும் படி செய்கிறேன். நீங்கள் கூறுவது உண்மையானல் நான் கூறுவதை ஏற்றுக் கொள்ளுங்கள் ‘ என்று சர்க்கா ருக்கு ஒரு ஸ்வால் விடுத்தார். ஆனல் அரசாங்கம் அதைக் குறித்து ஒன்றுமே சொல்லாமல் மெளனம் சாதித்து விட்டது. அதிலிருந்து அமரி முதலியவர்கள் கூறுவதெல் லாம் வெறும் சாக்குப்போக்கே என்று இந்திய மக்கள் எண்ணலானர்கள்.

யுத்தத்தின் நடுவில் சட்டத்தை மாற்ற முடியாது என்கிருரே, பிரான்ஸ் தேசம் ஜெர்மனிக்குச் சரணுகதி யடையும் சமயம் சர்ச்சில்துரை பிரான்ஸ்-சம் பிரிட்டனும் சேர்ந்து ஒரே ஐக்ய நாடாவதற்குப் புதிய சட்டம் இயற். றப் புறப்படவில்லையா? நமது தமிழ்நாட்டுத் தலைவர் வி. ஆர். கூறியதுபோல அரசியல் அமைப்பெல்லாம் தோல்போல் மாற்றமுடியாத ஒன் ருயிராமல் உடை போல் மாறிக்கொண்டே இருக்கக்கூடிய ஒன்றுதானே ?” அது தவிர, ஒரு அமைப்பு தனக்கு உபயோகமில்லை என்று கண்ட மறு நிமிஷமே அதை மாற்றத் தயங்காத ஜாதி அல்லவா பிரிட்டிஷ் ஜாதி ? அப்படியிருக்க இப் போதுமட்டும் சட்டத்தை மாற்றத் தயங்குவானேன்?

இந்தச் சமயத்தில் இந்திய அரசாங்கம் அதிகாரத்தில் அணுவளவும் விட்டுக்கொடுக்க விரும்பாததோடு கிற்கா மல், யுத்தத்தில் சேர்ந்துள்ள விஷயத்தைப் பற்றியும் அதற்கு உதவி செய்யும் விஷயத்தைப் பற்றியும் காங் கிரஸ்காரர்கள் தங்கள் அபிப்பிராயத்தை வெளியிட முடியாத வண்ணம் சில உத்தரவுகளைப் பிறப்பித்தது.

ஆகவே காங்கிரஸ் காரியக் கமிட்டியார் அரசியல் நிலைமையைக் குறித்து ஆலோசிப்பதற்காக வார்தாவில்